தேசிய நெடுஞ்சாலையில் திணறிப்போன வெற்றிமாறன்.. உடனடியாக உதவிய மனைவி.. செம லவ் போங்க

சென்னை: கோலிவுட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இப்போது விடுதாலி 2 படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கவிருக்கிறார். இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் அவரது முதல் படத்தின் படப்பிடிப்பின்போது வெற்றிமாறனுக்கு அவரது மனைவி ஆர்த்தி உதவிய சம்பவத்தை பார்க்கலாம்.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

Throwback Stories Vetrimaaran Aarthi

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கினார் வெற்றி. படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டு செம ரெஸ்பான்ஸை அள்ளி வருகிறது. நிச்சயம் விடுதலை படத்தைவிடவும் விடுதலை 2 வீரியமிக்கதாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. அதேபோல் அவர் எப்போது வடசென்னை 2 படத்தை இயக்குவார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.

உதவிய மனைவி: இதற்கிடையே வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகளும், கதிரவன் என்ற மகனும் இருக்கிறார்கள். வெற்றிமாறனுக்கு ஆர்த்தி எப்போதும் பக்கபலமாக இருந்திருக்கிறார். சினிமா வாய்ப்பு இல்லாமல் சுற்றி திரிந்த காலத்தில் வெற்றிமாறனை அப்படி பார்த்துக்கொண்டவர் ஆர்த்தி. அதனை இருவருமே பல முறை பகிர்ந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வெற்றிக்கு ஆர்த்தி உதவிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை அனுபவம்: அதாவது பொல்லாதவன் படத்துக்கு முன்னதாக தனுஷை வைத்து தேசிய நெடுஞ்சாலை படத்தைத்தான் வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தஹ்டு. அந்தப் படத்தில் தனுஷ் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் காட்சியை எடுக்க திட்டமிட்டாராம் வெற்றிமாறன். அதற்காக அவர்கள் பார்த்த இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகையாக கேட்டார்களாம். அப்போது வெற்றிக்கு அது முதல் படம் என்பதால் இதற்கே இவ்வளவு பட்ஜெட்டா என்று வாயை பிளந்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

உடனே தனது மனைவி ஆர்த்திக்கு (அப்போது காதலி) ஃபோன் செய்து உங்கள் அலுவலகத்தில் பெர்மிஷன் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். சரி கேட்டு பார்க்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்த ஆர்த்தி; அடுத்த ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஃபோன் செய்து ஆஃபிஸில் ஓகே சொல்லிவிட்டார்கள் என கூறினாராம். இதனை வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X