அடிக்க மட்டும்தான் செய்வாரா பாலா?.. பிரபலம் சொன்ன இன்னொரு பக்கம்.. மனுஷன் செமயா இருக்காரே
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பாலா குறித்து பேசியிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
குற்றச்சாட்டு: பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் அடிப்பார் என்ற குற்றச்சாட்டு கடந்த பல வருடங்களாகவே இருந்துவருகிறது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்கூட குச்சியை வைத்து அவர் அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. ஆனால் அது ஒரிஜினல் குச்சி இல்லை டம்மி குச்சி என்று பாலா கூறியிருந்தார். இந்தச் சூழலில் முதலில் வணங்கானில் சூர்யா நடித்தபோது அப்படத்தில் இருந்த பிரேமலு நடிகை மமிதா பைஜுகூட தெரிவித்திருந்தார்.

நாஞ்சில் நாடன்: இந்நிலையில் எழுத்தாளரும், கதையாசிரியருமான நாஞ்சில் நாடன் பாலா குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பரதேசி படத்தில் நான் அவருடன் இணைந்து வேலை செய்தபோது என்னை கதையாசிரியராக பார்க்காமல் ஒரு இலக்கியவாதியாகவே பார்த்தார். பாலாவிடம் எப்போதும் ஒரு குழந்தைத்தனம், அதீத அன்பையும் பார்க்க முடிந்தது. அதை பார்க்கும்போது இப்படிப்பட்டவரையா இந்த அளவுக்கு பேசிவருகிறார்கள் என்று வருத்தப்பட்டதும் உண்டு.
அம்மா இங்க வாங்க: பரதேசி படத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று நடித்திருக்கும். அந்தக் குழந்தையின் அம்மா அதற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஷூட்டிங்கிலிருந்து கிளம்பினார். பத்து அடி தூரம் சென்றிருப்பார். பாலா என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த அம்மாவை மீண்டும் அழைத்து தன்னிடம் இருந்த சில ஆயிரங்களை அம்மாவின் கைகளில் கொடுத்து குழந்தையை நல்லா பார்த்துக்கோங்க என்று சொல்லி அனுப்பினார். அதை பார்க்கும்போது இப்படியான குழந்தை மனம் படைத்தவரா பாலா என தோன்றியதாக தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











