ஊதா கலரு ரிப்பன்.. சிவகார்த்திகேயன் பட பாடலை கேவலம் என்று சொன்ன இயக்குநர்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் மதராஸி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக் தெரிகிறது. பராசக்தி படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்புதான் பொள்ளாச்சியில் தொடங்கியது. அடுத்ததாக அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் அவர் பட பாடல் ஒன்றை இயக்குநர் கேவலம் என சொன்னது தெரியவந்திருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் எஸ்கேவின் கரியரை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானாலும் அமரன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் அவரது சம்பளமும் உயர்ந்துவிட்டதாக ஒரு தகவல் திரைத்துறையில் பரவலாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இப்போதைய படங்கள்: அமரன் படத்தை முடித்த கையோடு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி ஆகிய படங்களில் நடிக்கும் வேலையை மும்முரமாக செய்தார். இவற்றில் மதராஸி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. பராசக்தி படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் தீவிரமாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Yugabharathi has spoken about the song Oodha Colouru Ribbon featured in the film Sivakarthikeyan
Photo Credit:

டாப் கமர்ஷியல் ஹீரோ: எஸ்கே திரைத்துறையில் அறிமுகமானபோது 10 படங்கள்கூட தாக்குப்பிடிக்கமாட்டார் என்றே பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் இப்போது பராசக்தி அவருக்கு 25ஆவது படமாகும். அதேபோல் கமர்ஷியல் ஹீரோவாகவும் வெல்லமாட்டார் என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால் இப்போது தமிழில் டாப் 6 கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் அவர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்: இப்படி சிவா கமர்ஷியல் பாதையில் சக்சஸாகவும், தைரியமாகவும் செல்வதற்கு முதல் விதை போட்டது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்தான். பொன்ராம் இயக்கியிருந்த அப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது. மேலும் படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடலும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. முக்கியமாக சிறுவர்கள், சிறுமிகள் சிவாவை ரசிப்பதற்கு அந்தப் பாடலும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

திட்டிய இயக்குநர்: இந்நிலையில் அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் யுகபாரதி ஒரு சம்பவத்தை பகிர்ந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு நிகழ்வில் பேசிய அவர், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் பாடலை அப்படத்துக்காக எழுதவில்லை. எழில் இயக்கிய தேசிங்கு ராஜா படத்துக்குத்தான் இமானும், நானும் அதனை உருவாக்கி வைத்திருந்தோம். அதனை எழிலிடம் போட்டு காண்பித்தபோது, இந்த கேவலமான பாடல் நமது படத்துக்கு தேவையா என்று கேட்டுவிட்டு; பயன்படுத்த மறுத்துவிட்டார். அதனை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டோம். பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பயன்படுத்தினோம். பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X