பயங்கர ஸ்ட்ரெஸ்.. ஒன்றுமே புரியல.. அப்போ அஜித் செய்தது என்ன தெரியுமா?.. யுவன் ஷங்கர் ராஜா ஓபன் டாக்

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகன். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது இசையில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. விஜய்க்கு பல வருடங்கள் கழித்து அவர் இசையமைத்திருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு அந்தப் படத்துக்கு இருந்தது. ஆனால் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக பேசப்படவில்லை. இந்தச் சூழலில் அஜித் பற்றி ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார் யுவன்.

இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவர் அறிமுகமாகிய முதல் படத்தின்போது அவரது வயது 15க்குள்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் யுவனுக்கு ஓரளவு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அப்படிப்பட்ட சூழலில் இயக்குநர் வசந்த் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு தைரியமாக யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக புக் செய்தார்.

throwback stories yuvan shankar raja ajith

பக்கா ஆல்பம்: வசந்த்தின் படங்கள் என்றாலே பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும். ஆனால் இந்த டீன் ஏஜ் பையன் வசந்த்துக்கு ஹிட் பாடல்களை கொடுத்துவிடுவாரா என்ற சந்தேகம்தான் அப்போது சினிமா துறையில் இருந்தது. யுவன் எதற்கும் அசராமல் தனது பெஸ்ட்டான இசையை கொடுத்தார். அனைத்து பாடல்களும் ஹிட். அதேபோல் பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனையடுத்து தீனா படத்துக்கு இசையமைத்து வளர தொடங்கினார்.

மேஜிக் கூட்டணி: அப்படிப்பட்ட சமயத்தில் செல்வராகவனுடன் முதன்முறையாக துள்ளுவதோ இளமை படத்தில் இணைந்தார். படம் சரியாக போகாவிட்டாலும் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட். தொடர்ந்து செல்வாவுடன் இணைந்து பயணம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் யுவன் - செல்வராகவன் - நா.முத்துக்குமார் என்ற மேஜிக் கூட்டணி உருவானது. அவர்கள் இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் இன்றுவரை ரசித்து கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அதேபோல் அமீர், விஷ்ணுவர்தன், ராம், வெங்கட் பிரபு ஆகியோருடனும் யுவன் ஷங்கர் இணைந்து பணியாற்றிய படங்கள் க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை. சூழல் இப்படி இருக்க அவருக்கு திருமண தோல்விகள் நடந்தன. கடைசியாக இஸ்லாம் மதத்துக்கு மாறி ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே அவரது தாய் ஜீவா உயிரிழந்தது யுவனை ரொம்பவே பாதித்தது. இதனால் அவரது கவனம் சிதறியது. ஒருகட்டத்தில் அவைகளை ஒருநிலைப்படுத்தி மீண்டும் இசையமைக்க வந்துவிட்டார்.

GOAT: அவரது இசையமைப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. விஜய் படத்துக்கு பல வருடங்கள் கழித்து அவர் இசையமைத்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படமும் ஓடவில்லை; படத்தின் இசையும் பேசவில்லை. இதன் காரணமாக யுவனும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்தான் ஆனார்கள். இந்நிலையில் யுவன் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி அவர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

யுவன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நல்ல இசையைத்தான் கொடுத்தேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. என்னை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று சொன்னார்கள். எனக்கோ, நான் நன்றாகத்தானே வேலை செய்தேன். பிறகு ஏன் இப்படி சொல்கிறார்கள். பாடல்களும் நல்ல ஹிட்தானே என்று ரொம்பவே ஸ்ட்ரெஸ் ஆனேன். அந்த சமயத்தில்தான் அஜித் எனது வீட்டுக்கு வந்து, 'யுவன் நான் நடிக்கும் தீனா படத்துக்கு நீதான் இசையமைக்க வேண்டும்' என்று சொன்னார். பிறகு அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகி எனக்கு வரிசையாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X