twitter
    X
    Home சினி தரவரிசை

    7 பிரிவுகளில் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை கைப்பற்றியது தமிழ் சினிமா

    Author Sakthi Harinath | Updated: Monday, October 25, 2021, 12:49 PM [IST]

    67வது தேசிய விருது வென்ற தமிழ் திரைப்படம் மற்றும் தமிழ் திரை நட்சத்திரங்களின் பட்டியல் இங்கு உள்ளது. இந்திய திரைத்துறையில் மிகவும் மதிக்கத்தக்க உயர் விருதான தேசிய விருதினை 2021ஆ,ம் ஆண்டு மார்ச் மாதம், 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக அசுரன் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதினை தனுஷ் பெற்றுள்ளார். மேலும் இயக்குனர் பார்த்திபனின் ஒத்தா செருப்பு சைஸ் 7 திரைப்படம், விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

    cover image
    அசுரன் - சிறந்த திரைப்படம்

    அசுரன் - சிறந்த திரைப்படம்

    1

    அசுரன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

     

    இப்படம் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் நாயகனாக நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். இப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 - ஸ்பெஷல் ஜூரி விருது

    ஒத்த செருப்பு சைஸ் 7 - ஸ்பெஷல் ஜூரி விருது

    2

    ஒத்த செருப்பு சைஸ் 7 தமிழ் திரையுலகில் எழுத்தாளராகவும், தனது அழுத்தமான வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பார்த்திபன் தானே இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையில் தனது உணர்ச்சிப்பூர்வமான எழுத்துகளால் ஒழி, ஒலி என இவ்விரண்டையும் அழகாக வழி நடத்தக்கூடிய படக்குழுவினரை கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளார் பார்த்திபன்.

     

    இப்படத்திற்கு 2019ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளது. 

    சிறந்த நடிகர் - அசுரன்

    சிறந்த நடிகர் - அசுரன்

    3

    தனுஷ், வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் திரைத்துறையில் தனுஷ் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி தமிழ் மற்றும் இந்திய சினிமாஎன புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் ...

    சிறந்த துணை நடிகர் - சூப்பர் டீலக்ஸ்

    சிறந்த துணை நடிகர் - சூப்பர் டீலக்ஸ்

    4

    விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர். இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். 2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ...

    நாக விஷால் - சிறந்த குழந்தை கதாபாத்திரம் - கே.டி

    நாக விஷால் - சிறந்த குழந்தை கதாபாத்திரம் - கே.டி

    5

    கே.டி என்னும் கருப்பு துரை என்ற குழந்தை நட்சத்திரத்தில் நடித்து பிரபலமான நாக விஷால், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த குழந்தை கதாபாத்திரத்திற்கான தேசிய விருதினை அள்ளிச்சென்றுள்ளார்.

    சிறந்த இசையமைப்பாளர் - விஸ்வாசம்

    சிறந்த இசையமைப்பாளர் - விஸ்வாசம்

    6

    டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.அவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் ...

    சிறந்த பின்னணி ஒலிக்கலைஞர் - ஒத்த செருப்பு சைஸ் 7

    சிறந்த பின்னணி ஒலிக்கலைஞர் - ஒத்த செருப்பு சைஸ் 7

    7

    ரெசுல் பூக்குட்டி இந்தியத் திரைப்பட ஒலி வடிவமைப்பாளர், ஒலித் தொகுப்பாளர் மற்றும் ஒலிக்கலவை கலைஞர் ஆவார். சிலம்டாக் மில்லியனயர் திரைப்படத்தில் ஒலிக்கலவை கலைஞராக பணியாற்றியதற்காக ரிச்சர்டு பிரைக் மற்றும் இயன் டப் ஆகியோருடன் இணைந்து அகாதமி விருது பெற்றார். இவர் ஹாலிவுட், பாலிவுட்,தமிழகத் திரைப்படத்துறை, மற்றும் மலையாளத் திரைப்படத் துறை போன்றவற்றில் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X