twitter
    X
    Home சினி தரவரிசை

    தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, March 7, 2022, 09:05 AM [IST]

    நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ் தற்போது இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு தமிழில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் 'விருது நாயகன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தனுஷ், அடுத்தடுத்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டு, பின்னர் இவர் நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    cover image
    ஜகமே தந்திரம்

    ஜகமே தந்திரம்

    1

    பேட்டை திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் போன்ற வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, கலையரசன், சஞ்சனா நடராஜன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

    கர்ணன்

    கர்ணன்

    2

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்கி வெற்றியடைந்து, தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தினை பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் இரண்டாவது திரைப்படம். நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 2021ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அட்ராங்கி ரே

    அட்ராங்கி ரே

    3

    அட்ராங்கி ரே இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். ஒரு ஹிந்தி திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    டி 43

    டி 43

    4

    துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தினை பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோஹனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படம் நடிகர் தனுஷ் நடிக்கும் 43வது திரைப்படமாகும்.

    D 44

    D 44

    5

    தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படம் நடிகர் தனுஷின் 44வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி பல வருடங்களுக்கு பின்னர் இப்படத்தில் இணைகிறது.

    D 45

    D 45

    6

    முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படம் திரையுலகில் தனுஷ் நடிக்கும் 45வது திரைப்படமாக உருவாகவிருக்கிறது.

    நான் ருத்ரன்

    நான் ருத்ரன்

    7

    "நான் ருத்ரன்" மதராசபட்டினம் திரைப்படத்தினை போன்று 1945ஆம் ஆண்டுகளில் நடக்கும் திரைக்கதையில் உருவாகும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் தனுஷ் இயக்குகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் நாயகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

    தி கேரி மேன்

    தி கேரி மேன்

    8

    நெட்பிளிஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தினை பிரபல அவென்ஜர்ஸ் திரைப்பட இயக்குனர் இயக்கவுள்ளனர். இப்படத்தின் கிறிஸ் எவன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் இரண்டாம்கட்ட நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    வட சென்னை

    வட சென்னை

    9

    இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என தமிழ் திரையுலக வட்டாரங்களில் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இப்படம் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுப்பேட்டை 2

    புதுப்பேட்டை 2

    10

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம், இப்படம் இவர்களின் கூட்டணியில் உருவான புதுப்பேட்டை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருதினராக சென்ற செல்வராகவன் அங்கு இந்த தகவலை கூறி இதனை உறுதிசெய்துள்ளார்.

    ஆயிரத்தில் ஒருவன் 2

    ஆயிரத்தில் ஒருவன் 2

    11

    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம்.இப்படத்தின் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2021ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வெளியானது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X