தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள்

    நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் பிரமாண்ட திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ் தற்போது இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு தமிழில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகில் 'விருது நாயகன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தனுஷ், அடுத்தடுத்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டு, பின்னர் இவர் நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பேட்டை திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் போன்ற வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, கலையரசன், சஞ்சனா நடராஜன் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.

    பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்கி வெற்றியடைந்து, தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தினை பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் இரண்டாவது திரைப்படம். நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 2021ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3. அட்ராங்கி ரே

    அட்ராங்கி ரே இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். ஒரு ஹிந்தி திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.