twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படங்கள் & கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Published: Tuesday, September 27, 2022, 04:51 PM [IST]

    உலக அழகி என பலரால் கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படங்கள் மற்றும் தமிழ் படங்களில் அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் இந்த பட்டியலில் உள்ளன. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என தமிழ் சூப்பர் ஹிட் படங்களில் முன்னணி நடிகையாக இவர் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பிரபலமாக புகழ் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களும், அதில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் பற்றிய விவரங்கள் இதோ.

    cover image
    இருவர்

    இருவர்

    1

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997ல் வெளியான திரைப்படம். இதில் மோகன்லால் - பிரகாஷ்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் புஷ்பவள்ளி & கல்பனா என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இருவர் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள (நந்தினி & மந்தாகினி தேவி) கதாபாத்திரத்தில் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்-ன் முதல் திரைப்படமாகும்.

    ஜீன்ஸ்

    ஜீன்ஸ்

    2

    1998ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த் மற்றும் நாசர் இரட்டை கதாபாத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம். இதில் மதுமிதா கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார், ஆனால் இப்படத்தில் மதுமிதா & வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரத்திரமாக இரட்டை சகோதரி போன்று நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் பலரால் கொண்டாடப்பட்ட வெற்றி திரைப்படமாகும். இப்படத்தில் ஐஸ்வர்யா நடனமாடும் பாடலில் வரும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது, ஐஸ்வர்யா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ளார்.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    3

    2000-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான குடும்ப திரைப்படம். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மீனாட்சி என்ற ஒரு நடுத்தர குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் சகோதரியாக இப்படத்தில் நடிகை தபு நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடி மற்றும் பாடகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டு இவருக்கு பல புகழினை பெற்றுத்தந்தது.

    எந்திரன்

    எந்திரன்

    4

    2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம். இப்படத்தில் நாயகியான சனா கதாபாத்திரத்தில் நடிகர் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் ரோபோட் என ஹிந்தியிலும், ரோபோ என தெலுங்கு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

    ராவணன்

    ராவணன்

    5

    மணிரத்னம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு உருவான திரைப்படம். இப்படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இவர் நடிகர் பிருத்விராஜ் மனைவியான 'ராகினி சுப்பிரமணியன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ராமாயணம் சாயலில் உருவான திரைப்படம். இதில் சீதா தோற்றத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் (PS 1)

    பொன்னியின் செல்வன் (PS 1)

    6

    மணிரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நாவல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி மற்றும் மந்தாகினி தேவி (தாய் & மகள்) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதையின் உயிரோட்டமே நடிகை ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் தான்.

    ஜோதா அக்பர், தூம் 2, குரு

    ஜோதா அக்பர், தூம் 2, குரு

    7

    தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜோதா அக்பர், தூம் 2, குரு போன்ற படங்கள் டப்பிங் செய்யப்பட்ட வெளியாகின. இப்படத்தில் இடம் பெற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்-யின் தூம் 2 (சன்னேரி) - ஜோத அக்பர் (ஜோதா பாய்) - குரு (சுஜாதா தேசாய்) ஆகிய கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாகின. இப்படம் நேரடியாக தமிழ் சினிமாவில் வெளியாகாமல் ஒரு டப்பிங் படமாக வெளியாகின.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X