வாரிசு Vs துணிவு: விமர்சனத்தில் வென்றது யார்?

  2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள விஜய்யின் வாரிசு படம் மற்றும் அஜித்குமாரின் துணிவு படம் ஒரே நாளில் ஜனவரி 11ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களில் விமர்சனம் ரீதியாக எந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவை அளித்துள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம், முழு விவரங்கள் இதோ.

  துணிவு - நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 61வது திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி, போனி கபூர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதிரடி & திரில்லர் திரைக்கதை அம்சத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பிரமாண்ட முறையில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது.

  வாரிசு - நடிகர் விஜய் நடித்துள்ள 66வது திரைப்படம். இப்பத்தினை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இயக்குனர் வம்சி இயக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். அதிரடி & குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் பிரமாண்ட முறையில் தமிழில் வெளியாகியுள்ளது.

  3. பொங்கல் கிளாஷ்

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய் & அஜித் குமார். இவர்களது படங்கள் 150 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வியாபாரம் செய்து வருகிறது. இந்த இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி போட்டி உண்டாகியுள்ளது.

  4. டிரைலர் ரெகார்டஸ்

  வாரிசு மற்றும் துணிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் பல சாதனைகள் படைத்துள்ளது. துணிவு டிரைலர் ஒரே நாளில் 30 மில்லியன் வியூஸ் மற்றும் வாரிசு டிரைலர் ஒரே நாளில் 23 மில்லியன் வியூஸ் அள்ளி சாதனை படைத்துள்ளது.

   

  5. துணிவு விமர்சனம்

  அதிரடி - திரில்லர் திரைக்கதையில் குடும்பங்கள் ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம், ஒரு ஜனரஞ்சகமான படைப்பாக, இந்த சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் உருவாகி மக்களை கவர்ந்துள்ளது. தனது கருத்தை எளிய முறையில் ரசிகர்களுக்கு எடுத்துரைத்து வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் ஹச் வினோத்.

  6. வாரிசு விமர்சனம்

  குடும்ப பிரச்சனைகள் மற்றும் அதிரடி என திரைக்கதையில் வெரைட்டி காட்டியுள்ளார் இயக்குனர். குடும்ப படமாக உருவான இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரபலமாகியுள்ளது. இப்படம் நிச்சியம் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும், ஆனால் அனைவரையும் திருப்தி படுத்தாது.

   

  7. மொத்தத்தில் யார் பெஸ்ட்?

  வாரிசு & துணிவு இரு படங்களிலும் ரசிகர்களுக்கு ஏற்ற வாறு பல மாஸ் காட்சிகள் மற்றும் தரமான வசனங்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீளம் கொண்டுள்ள வாரிசு திரைப்படம், ரசிகர்களின் பொறுமையை சோதனை செய்கிறது. மறுபுறம் அஜித்தின் துணிவு அதிரடி படமாக சரியான மணி நேர அளவில் உருவாகி ரசிகர்களுக்கு ட்ரீட் அளித்துள்ளது.