3 நாட்களில் உலகளவில் ₹100 கோடி வசூல் அள்ளிய துணிவு

  நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இப்படம் உலகளவில் 100 கோடிகள் வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது.முழு விவரங்கள் இதோ.

  துணிவு - நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 61 திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தினை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

   

  2. ரிலீஸ்

  துணிவு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது. அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம், ஒரு பான் இந்திய படமாக உருவாகி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

   

  3. முதல் நாள் வசூல்

  துணிவு திரைப்படம் ரிலீஸான ஜனவரி 11 முதல் நாளில் தமிழகத்தில் மட்டும்  ₹ 24.59 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உலகளவில் இப்படம் முதல் நாளில் ₹ 50.20 கோடிகள் வசூலித்துள்ளது.

  4. இரண்டாம் நாள் வசூல்

  துணிவு திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் உலகளவில் ₹ 28.18 கோடிகளும், தமிழ் சினிமாவில் மட்டும் ₹ 14.32 கோடிகள் வசூல் செய்துள்ளது.

   

  5. மூன்றாம் நாள் வசூல்

  துணிவு திரைப்படம் ரிலீஸான மூன்றாம் நாளில் தமிழகத்தில் மட்டும் ₹ 12.06 கோடிகள் வசூலித்துள்ளது. உலகளவில் இப்படம் ₹ 24.76 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

  6. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் துணிவு

  துணிவு திரைப்படம், ரிலீஸான மூன்று நாட்களில் மொத்தம் 100 கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 50 கோடிகளை வசூலித்துள்ளது

  Related Lists