twitter
    X
    Home சினி தரவரிசை

    2021-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த அறிமுக நடிகைகள்

    Author Sakthi Harinath | Published: Friday, December 3, 2021, 04:24 PM [IST]

    2021-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் சிலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ரசிகர்களை கவர்ந்து பலரால் கொண்டாடப்பட்ட குறிப்பிடப்படும் நடிகைகள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளனர். சிறந்த நடிப்பு மற்றும் சிறந்த கதாபாத்திரம் மூலம் இந்த ஆண்டு பிரபலமான அறிமுக நடிகைகளான மாளவிகா மோஹனன், ரஷ்மிகா மந்தன்னா, பிரியங்கா அருள் மோகன், திவ்யா பாரதி என சில பிரபல நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    cover image
    மாஸ்டர்

    மாஸ்டர்

    1

    மாளவிகா மோஹனன் 2013-ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர், இவர் மலையாள திரைப்படத்தினை தொடர்நது கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிறப்புமாளவிகா மோஹனன் 1993-ம் ஆண்டு மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு. மோஹனன் மற்றும் பீனா மோஹனன் ஆகியோருக்கு மகளாக பிறந்துள்ளார். இவர் கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக ...

    ஈஸ்வரன், பூமி

    ஈஸ்வரன், பூமி

    2

    நிதி அகர்வால், மாடெல்லிங் துறையில் பணியாற்றும் பிரபல வடிவழகி , திரைப்பட நடிகை மற்றும் நடனமாடுபவர் ஆவார். ஹிந்தி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். தெலுங்கு திரைப்படத்தில் இவர் பெற்ற பிரபலத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படத்தில் 2020ம் ஆண்டு நாயகியாக ...

    சுல்தான்

    சுல்தான்

    3

    ராஷ்மிகா மந்தனா (ரஷ்மிகா மந்தண்ணா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.பிரபலம்2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு ...

    கர்ணன், ஜெய் பீம்

    கர்ணன், ஜெய் பீம்

    4

    ராஜீஷா விஜயன் தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகை ஆவார். இவர் தமிழில் கர்ணன் படத்தில் நடித்து தமிழ் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், அதே ஆண்டு சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். ...

    சர்பட்டா பரம்பரை

    சர்பட்டா பரம்பரை

    5

    துஷார விஜயன் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் போதை ஏறி புத்தி மாறி (2019) திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ...

    டாக்டர்

    டாக்டர்

    6

    பிரியங்கா மோகன் (பிரியங்கா அருள் மோகன்) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான "ஒந்து கதை ஹெல" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அதற்கு பின்னர் அதே ஆண்டு தெலுங்கு சினிமாவில் பிரபல வெற்றி திரைப்படமான "கேங் லீடர்" ...

    பேச்சிலர்

    பேச்சிலர்

    7

    திவ்யா பாரதி - பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X