twitter
    X
    Home சினி தரவரிசை

    2022: தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன் கதாபாத்திரங்கள் & நடிகர்கள்

    Author Sakthi Harinath | Published: Thursday, December 22, 2022, 05:21 PM [IST]

    தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வில்லன் கதாபாத்திரங்களின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் உள்ளது. வில்லன் கதாபத்திரத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் காரணமாக விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நடிகர்கள் வில்லனாக நடிக்க தொடங்கிவிட்டனர். இந்த பட்டியலில் இந்த ஆண்டு மட்டும் மக்கள் மத்தியில் பேசப்பட்ட சிறந்த வில்லன் நடிகர்கள் & வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளன. முழு பட்டியல் இதோ.

    cover image

    1

    சூர்யா சிவகுமார் (ரோலெக்ஸ்) - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் முக்கிய வில்லன் ஆவார். இப்படம் இறுதியில் ஒரு 15 நிமிடங்கள் மட்டுமே இந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் இடம் பெரும். சூர்யா நடித்த இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டது.

    2

    விஜய் சேதுபதி (சந்தனம்) - கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தின் வில்லன். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக பல படங்கள் நடித்திருந்தாலும் வில்லனாக நடிக்கும் படங்கள் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள சந்தனம் கதாபாத்திரத்தின் அழுத்தம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    3

    நானே வருவேன் படத்தில் ஹீரோ - வில்லன் என இரு வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார், தனுஷ். அண்ணன் - தம்பி என இரட்டையர் கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய தனுஷ், பலரின் கவனத்தை கவர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளார். சைக்கோ & திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இரு வெவ்வேறு கதாபாத்திரத்திலும் நடிகர் தனுஷ் நடித்து கலக்கியுள்ளார்.

    4

    கார்த்திகேயா - இந்த ஆண்டு இயக்குனர் ஹச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் பிரபலமாகியுள்ளார். நடிகர் அஜித்திற்கு வில்லனாக பைக் ரேஸ் & சண்டை என பல விஷயங்கள் செய்து அசத்தினார். இப்படத்தின் மூலம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் இவர் பேசப்பட்டுள்ளார். இவர் தெலுங்கு படங்களில் வில்லன் & நாயகன் என இரு பாத்திரத்திலும் நடித்து கலக்கியுள்ளார்.

    5

    வினய் ராய் - ஹீரோவாக உன்னாலே உன்னாலே போன்ற பல படங்களில் நடித்து காதல் நாயகனாக கோலிவுட் சினிமாவை வலம் வந்தவர். இந்த ஆண்டு 2022ல் இவர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தின் அழுத்தம் மற்றும் வில்லத்தனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

     

    6

    ஆரவ் - தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர். சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் 'கழக தலைவன்' படத்தில் ஆரவ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து அசத்தியுள்ளார். இந்த கதாபாத்திரம் மிகவும் மோசமான பத்திரமாக வடிவமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது.

    7

    லால் - இந்த ஆண்டு இயக்குனர் தமிழ் இயக்கி நேரடியாக ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட திரைப்படம். இப்படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். தமிழக போலீஸ் பயிற்சி முகாமில் நடக்கும் அநீதி மற்றும் அடக்கு முறைக்கு எதிராக இப்படம் உருவாகி பெரிய அளவில் பேசப்பட்டது.நல்ல விமர்சனங்களில் பிரபலமான இப்படத்தில் வில்லனாக நடிகர் லால் நடித்துள்ளார். அதிகார திமிரில் நடிகர் லால் செய்யும் அடக்குமுறை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X