பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள்

  தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் இங்கு உள்ளன. உலகளவில் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மொழியிலும் தலைசிறந்த பிரபலங்கள் மூலம் தொகுக்கப்பட்டு பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழியில் 2006-ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட இந்த நிகழ்ச்சி, தென்னிந்தியாவில் 2017-ஆம் ஆண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி என அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல திரை நட்சத்திரங்கள் மூலம் தொகுக்கப்பட்டு பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் மொத்தம் 7 மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்த தொகுப்பில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் விவரங்கள் உள்ளன.
  முகமது அஸீம் - தமிழ் சின்னத்திரையில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்தவர். இவர் 2022 - 2023 ஆம் ஆண்டு நடை பெற்ற 'பிக்பாஸ் சீசன் 06' நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
  தமிழ் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ராஜு ஜெயமோகன் 2021-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றியாளராக வாகை சூடினார்.
  தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து பிரபலமான இவர், தமிழ் மக்களின் நலத்திற்காக சமூக போராட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு என பல செயல்களில் பங்கேற்று தமிழ் மக்களின் மனதை கவந்தவர்.
  Complete: Aari Biography
  மலைசிய நாட்டின் பிரபல தமிழ் ஆல்பம் பாடகர். இவர் பாடிய சில ஆலம்பம் பாடல்களின் வெற்றியை தொடர்ந்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தற்போது பல தமிழ் பாடல்களில் பின்னணி பாடகராவும், திரைப்படங்களில் நாயகனாகவும் பணியாற்றி வருகிறார்.  
  தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றியாளராக பிரபலமானார். ஆனால் இவரது திரைப்பயணத்தில் சற்றும் முன்னேற்றம் இல்லாமல் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.
  ஒரு மாடல் நட்சத்திரமாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர், அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக தமிழ் திரையில் பிரபலமானார். தற்போது தமிழ் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
  Complete: Aarav Biography

  Related Lists