twitter
    X
    Home சினி தரவரிசை

    2022, கோலிவுட் டாப் நடிகைகள் & சம்பள விவரங்கள்

    Author Sakthi Harinath | Published: Monday, November 28, 2022, 03:16 PM [IST]

    திரையுலகில் தனது ஒவ்வரு பட வெற்றிக்கும் சம்பளத்தை படிப்படியாக ஏற்றுகின்றனர் பிரபலங்கள். நடிகர்களை போல நடிகைகளும் சினிமாவில் கோடியில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். இங்கு டாப் தமிழ் பட நடிகைகளின் சம்பள விவரங்கள் உள்ளன. நயன்தாரா இந்த ஆண்டு ஒரு படத்திற்காக 10 கோடிகள் வரை சம்பளமாக பெற்றுள்ளார். சமந்தா 8 கோடிகள் வரை சம்பளமாக பெற்று வருகிறார். இந்த 2022ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கியுள்ள டாப் தமிழ் நடிகைகளின் பட்டியல் இதோ.

    cover image
    10 Cr

    10 Cr

    1

    நயன்தாரா 2022ஆம் ஆண்டு 'காதுவாக்குல ரெண்டு காதல்', ஓ2, கோல்ட் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு 10 கோடிகள் வரை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    8 cr

    8 cr

    2

    நடிகை சமந்தா இந்த 2022ஆம் ஆண்டில் 8 கோடிகள் வரை சம்பளம் வாங்கியுள்ளார். இவர் காதுவாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா படத்தில் இந்த ஆண்டு நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல படங்களாக அமைந்துள்ளது. இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சரிவுகளை கண்டிருந்தாலும், திரைவாழ்வில் இவர் உயரத்திற்கு வந்துள்ளார். 

    3 cr

    3 cr

    3

    கீர்த்தி சுரேஷ், 2022ல் சாணி காயிதம் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தினை பெற்று தந்துள்ளது. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு  சினிமாவில் குட் லக் சகி, சர்காரு வாரி பாட்டா படங்களில் நடித்துள்ளார். 2022ல் கீர்த்தி சுரேஷ் 3 கோடிகள் வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

    4 cr

    4 cr

    4

    பூஜா ஹெக்டே - இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து ராதே ஷியாம் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்த ஆண்டு 4 கோடிகள் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

    4 cr

    4 cr

    5

    காஜல் அகர்வால் இந்த ஆண்டு ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த வருடம் இவருக்கு 4 கோடிகள் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். 

    4 cr

    4 cr

    6

    திரிஷா கிருஷ்ணன் தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இவரின் இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு தமிழ் சினிமாவில் பிரபலமானது. இவர் ஒரு படத்திற்கு 4 கோடிகள் வரை சம்பளம் பெற்று வருகிறார். 

    2 cr

    2 cr

    7

    சாய் பல்லவி, 2022ல் கார்கி படத்தில் நாயகியாக நடித்து கலக்கினார். சாய் பல்லவியின் கார்கி படம் இவரது திரைவாழ்வில் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது. இவர் ஒரு படத்திற்கு 2 கோடிகள் வரை சம்பளம் பெற்று வருகிறார்.

    2 cr

    2 cr

    8

    ஆண்ட்ரியா - தமிழ் சினிமாவில் வட்டம், அனல் மேலே பனித்துளி என இரு படங்களில் நடித்துள்ளார். பிசாசு 2, மாளிகை என அடுத்தடுத்து இவரது படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. இவர் ஒரு படத்திற்காக 2 கோடிகள் வரை சம்பளமாக பெற்று வருகிறார். 

    1 cr

    1 cr

    9

    பிரியங்கா மோகன் - வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் எதற்கும் துணிந்தவன், டான் என இரு வெற்றி படங்களில் 2022ல் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இரு வெற்றி படங்கள் தந்துள்ள இவர், ஒரு படத்திற்கு 1 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.

    2 cr

    2 cr

    10

    நித்யா மேனன் - தமிழ் சினிமாவில் பல ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஆவார். இவர் இந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் ஷோபனா கதாபாத்திரம் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட பாத்திரம் ஆகும். இவர் ஒரு படத்திற்காக 2 கோடிகள் வரை சம்பளம் பெற்று வருகிறார்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X