twitter
    X
    Home சினி தரவரிசை

    தன்னை விட வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட திரை நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Published: Tuesday, August 9, 2022, 04:13 PM [IST]

    தன்னை விட வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன. காதலுக்கு கண்ணில்லை என்ற பழமொழியை, காதலுக்கு வயது வரம்பில்லை என்று மாற்றி காட்டிய இந்திய பிரபலங்கள் ஏராளம். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையேயான திருமணம் பல மாதங்கள் மட்டுமே நீடித்தது. திருமணத்தின் போது தனுஷுக்கு 21 வயது, ஐஸ்வர்யாவுக்கு 23 வயது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இருவரின் அழகான குடும்ப வாழ்க்கை இருந்தது. தனுஷ் போன்று வயது வித்தியாசத்தில் தன்னை விட வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிரபல திரையுலக நட்சத்திரங்கள் பற்றிய பட்டியல் இதோ.

    cover image
    பூர்ணிமா - இந்திரஜித்

    பூர்ணிமா - இந்திரஜித்

    1

    மலையாள சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பூர்ணிமாவும் இந்திரஜித்தும் ரசிகர்களின் விருப்பமான நட்சத்திர ஜோடி. இருவரும் டிசம்பர் 13, 2002 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திரஜித் சுகுமாரன் பூர்ணிமாவை விட ஒரு வயது இளையவர்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    2

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 18, 2004 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது தனுஷுக்கு 21 வயது, ஐஸ்வர்யாவுக்கு 23 வயது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையேயான திருமணம் பந்தம் 18 வருடங்கள் மட்டுமே நீடித்தது. நடிகர் தனுஷ் தன் மனைவியை விட இரண்டு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    நம்ரதா ஷிரோத்கர்

    நம்ரதா ஷிரோத்கர்

    3

    தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன் மனைவியை விட இரண்டு வயது சிறியவர். மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர் இருவரும் 4 வருட காலம் காதலித்துள்ளனர்.  இவர்களது திருமணம் தெலுங்கு திரையுலகில் நட்சத்திரங்கள் திருமணமாக பிரமாண்டமாக நடந்துள்ளது.

    ராதிகா

    ராதிகா

    4

    கன்னட சினிமாவில் இருந்து தற்போது ஒரு பான் இந்தியா நாயகனாக அவதரித்துள்ள நடிகர் யஷ் & அவரின் மனைவி ராதிகா இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமணம் ஒரு நட்சத்திர திருமணமாக கன்னட திரையுலகில் டிசம்பர் 2016-ல் நடந்து. 2007 இல் ஒளிபரப்பான நந்தகோகுல சீரியல் மூலம் யஷ் மற்றும் ராதிகா காதலிக்க தொடங்கியுள்ளனர். யஷ் தனது மனைவியை விட 2 வயது இளையவர்.

    நிக் ஜொனாஸ்

    நிக் ஜொனாஸ்

    5

    பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா - ஹாலிவுட் நடிகரான நிக் ஜொனாஸ் என்பவரை 2018 இல் திருமணம் செய்து கொண்டார். நிக்கை விட பிரியங்கா பத்து வயது மூத்தவர். இவர்கள் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

    ராஜ் குந்த்ரா

    ராஜ் குந்த்ரா

    6

    பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா 'S2' பெர்ப்யூம் நிகழ்ச்சியின் போது சந்தித்துள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து 2009 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். ராஜ் குந்த்ரா ஷில்பா ஷெட்டியை விட 3 மாதங்கள் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அபிஷேக் பச்சன்

    அபிஷேக் பச்சன்

    7

    ஹிந்தி திரையுலகில் பலரால் கொண்டாடப்படும் ஜோடிகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன். நடிகர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விட 2 வருடம் இளையவர். இந்த ஜோடிக்கு 2007 ஆம் ஆண்டு திருமணமானது.

    அம்ரிதா சிங்

    அம்ரிதா சிங்

    8

    ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான் - கரீனா கபூரை திருமணம் செய்யும் முன், அம்ரிதா சிங் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தார். நடிகர் சைஃப் அலி கான்யை விட அவரது முன்னாள் மனைவி 12 வயது மூத்தவர். தன் முதல் மனைவியுடன் 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த சைஃப் அலி கான் 2004 இல் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி

    சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி

    9

    திரைநட்சத்திரங்கள் போல இந்திய மக்கள் பேசப்பட்ட நாயகன் சச்சின் டெண்டுல்கர். இவர் அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சச்சின் மனைவி அவரை விட ஆறு வயது மூத்த பெண் ஆவார். இவர்கள் 27 வருடங்களுக்கு மேலாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

     

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X