twitter
    X
    Home சினி தரவரிசை

    மனைவியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்த சூப்பர் முடிவுகள் !!

    Author Sakthi Harinath | Updated: Monday, February 13, 2023, 03:01 PM [IST]

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் ஆவார், ரஜினி. சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் தன் வாழ்க்கையை மாற்றியது எனது மனைவி தான் என தன் மனைவி லதா ரஜினிகாந்த்-ற்கு புகழாரம் சூட்டியுள்ளார், தினமும் மது, சிகரெட் என பல்வேறு கெட்ட பழக்கங்களுடன் வாழ்ந்து வந்த என்னை தனது மனைவி லதா தான் மாற்றி நல்வழிப்படுத்தினார் என்றுள்ளார், ரஜினி. இந்த செய்தியை பற்றிய முழு விவரங்கள் இதோ.

    cover image
    சூப்பர் ஸ்டார்

    சூப்பர் ஸ்டார்

    1

    தமிழ் சினிமாவில் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து அறிமுகமானார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார், ரஜினி. இவர் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் பட்டம் வென்ற பிரபலம் ஆவார். இவரின் படங்கள் 150 கோடிகளுக்கு மேல் சராசரியாக வசூல் செய்து வருகிறது. 72 வயது ஆகியும் இன்றும் நாயகனாக நடித்து வரும் நட்சத்திரம் ஆவார், ரஜினிகாந்த்.

    ஷார்ப் புரொடக்‌ஷன்ஸ்

    ஷார்ப் புரொடக்‌ஷன்ஸ்

    2

    தமிழ் பட மூத்த நடிகரான வொய் ஜி மஹேந்திரன், நேற்று (26 ஜனவரி, 2023)ல் 'ஷார்ப் புரொடக்‌ஷன்ஸ்' என்னும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'சாருகேசி' என்னும் படத்தினை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமா 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினி கலந்து கொண்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இந்த நிறுவனத்தின் புதிய படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார்.

    ரஜினியின் பேச்சு

    ரஜினியின் பேச்சு

    3

    இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், எமோஷனலாக பேசி பலரின் கவனத்தை கவர்ந்துவிட்டார். மேடையில் பேச தொடங்கிய ரஜினி, முதலில் அவருக்கும் வொய் ஜி மஹேந்திரன் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய நட்பு பற்றி பேசினார். பின் தன் லதா ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார். பின் தன் கடந்த கால வாழ்க்கையில் அவர் வாழ்ந்து வந்துள்ள விதம், தற்போது இவர் வாழுகிற வாழ்க்கை என பல விஷயங்களை பற்றி இந்த விழாவில் பேசியுள்ள, ரஜினிகாந்த்.

    ரஜினியின் கடந்தகால வாழ்க்கை

    ரஜினியின் கடந்தகால வாழ்க்கை

    4

    ரஜினிகாந்த் நடிகனாக ஆவதற்கு முன் முதலில் ஒரு பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தவர். அந்த காலகட்டங்களில் அவருக்கு தவறான நண்பர்களால் தவறான பழக்கவழக்கம் இருந்ததாம். தினமும் இரு வேலை அசைவம் சாப்பிட்டு, பல சிகரெட்களை எடுத்துக்கொள்வாராம். மது பழக்கமும் கூட அதிகமாக இருந்ததாம். சைவம் சாப்பிடுபவர்களை கண்டால் தனக்கு பாவமாக இருக்கும் என தன் கடந்தகால வாழ்க்கையை பற்றி தானே விமர்சித்துள்ளார், ரஜினிகாந்த்

     

    நட்பு

    நட்பு

    5

    சினிமாவில் நடிக்க தொடங்கியபோது தனக்கு வொய் ஜி மஹேந்திரனின் நட்பு கிடைத்தது. அவர் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார். வொய் ஜி மஹேந்திரன் மூலம் தான் என் மனைவி லாத எனக்கு அறிமுகமானார், என்றார் ரஜினிகாந்த். ரஜினி - மஹேந்திரனின் குடும்பங்கள் ஒற்றுமையாக குடும்ப நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

     

    மனைவிக்காக மாறிய ரஜினி

    மனைவிக்காக மாறிய ரஜினி

    6

    "தினமும் சிகரெட் பிடிப்பேன், மது அருந்துவேன், அசைவம் சாப்பிடுவேன் பின்பு நான் நடிகனாகி பணம், பெயர், புகழ் வந்ததும் காலையிலேயே ஆப்பம், சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா போன்றவை தான் சாப்பிடுவேன். அப்படி இருந்த என்னை அன்பால் நல்வழிப்படுத்தி இன்றும் என்னை ஆரோக்கியமாக வைத்துள்ளார், என் மனைவி லதா" என்றுள்ளார் ரஜினிகாந்த்.

     

    ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    7

    "சரக்கு, சிகரெட், அசைவ உணவு எல்லாம் மோசமான காம்பினேஷன். இதனை அளவுக்கு மீறி பல வருடங்களாக சாப்பிட்டவர்கள் யாரும், எனக்கு தெரிந்தவரை 60 வயசு வரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததே கிடையாது. அதற்கு உள்ளே போயிட்டாங்க. அப்படி 60 வயசுக்கு மேல வாழ்ந்தாலும், நடமாட முடியாமல், படுத்த படுக்கையா தான் இருக்காங்க. இதற்கு நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம், ஆனா நான் என் வாயால் சொல்ல விரும்பவில்லை." - என்றார் ரஜினிகாந்த்

     

    அன்பால் என்னை மாற்றினார்

    அன்பால் என்னை மாற்றினார்

    8

    சரக்கு, சிகரெட், அசைவ உணவு போன்றவற்றை தினசரியாக சாப்பிட்டு வந்த ரஜினியை அன்பாலே மாற்றியுள்ளார், ரஜினியின் மனைவி லதா. இது போன்ற பழக்கங்களை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. அன்பாக ரஜினியை மாற்றி, சிறந்த மருத்துவர்களை ரஜினியிடம் அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலம் ரஜினியை ஒரு பக்குவத்துக்கு கொண்டு வந்ததே லதா ரஜினி தான். ரஜினி நடித்துள்ள படங்களில் அவர் திருமணத்திற்கு முன் எப்படி இருந்துள்ளார், திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறார் என ரஜினியின் படங்களிலையே வித்தியாசம் தெரியும். அந்த அளவிற்கு ரஜினியை பக்குவப்படுத்தியுள்ளார், லதா ரஜினிகாந்த்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X