X
முகப்பு சினி தரவரிசை

Maharaja Blockbuster: 4 தினத்தில் ரஜினியின் லால் சலாம் பட முழு வசூலை முந்திய மகாராஜா...

Author Sakthi Harinath | Published: Tuesday, June 18, 2024, 02:42 PM [IST]

Maharaja Blockbuster: 4 தினத்தில் ரஜினியின் லால் சலாம் பட முழு வசூலை முந்திய மகாராஜா... - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தின் வசூல் நிலவரம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஜா வெளியான 4 தினங்களில் ரஜினியின் 'லால் சலாம்' பட மொத்த வசூலையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது. முழு விவரங்கள் இதோ.


cover image
Video Thumbnail

மகாராஜா - மகாராஜா

மகாராஜா - இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


குடும்பங்கள் கண்டு மகிழும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Video Thumbnail

மகாராஜா - மகாராஜா - கதை

விஜய் சேதுபதி கே.கே நகர் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கரணை பகுதியில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஒரு நாள் தனது வீட்டில் இருந்த லட்சுமி-யை காணவில்லை என போலீஸ் ஸ்டேஷன்-க்கு புகார் அளிக்க வரும், விஜய் சேதுபதி பல அவமானங்களை சந்தித்து போலிஸிடம் சில லட்சம் லஞ்சம் தருவதாக டீல் செய்து தனது வீட்டில் காணாமல் போன லட்சுமியை கண்டுபிடிக்க சொல்கிறார். விஜய் சேதுபதியின் டீலுக்காக போலீஸ் அதிகாரி நடராஜன் தனது தேடலை தொடங்குகிறார்.


கதைக்களம் நகர பல விஷயங்கள் வெளிவருகிறது. 15 வருடத்திற்கு முன் அனுராக் காஷ்யப் எலக்ட்ரிகல் தொழில் செய்து வருகிறார். பகல் நேரத்தில் எலக்ட்ரிகல், இரவு நேரத்தில் திருட்டு என செய்து வருகிறார் அனுராக் காஷ்யப். தான் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார், அனுராக் காஷ்யப். ஒரு நாள் போலீஸிடம் சிக்கும் அனுராக் காஷ்யப், இதற்கு காரணம் விஜய் சேதுபதி தான், என தவறாக புரிந்து கொள்கிறார். 15 வருடம் ஜெயில் தண்டனைக்கு பிறகு வெளிவரும் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை தேடி கண்டுபிடித்து அவரை பழிவாங்க துடிக்கிறார். 


விஜய் சேதுபதியின் மனைவி திவ்யா பாரதி ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்க, அப்போது அவரது மகளை குப்பை தொட்டியில் போட்டு செல்கின்றனர். விஜய் சேதுபதி தன் மகளுடன் அந்த குப்பை தொட்டியையும் எடுத்து வருகிறார். அந்த குப்பை தொட்டியின் பெயர் தான் லட்சுமி. 


ஜெயிலில் இருந்த வெளிவந்த அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். பின்னர் விஜய் சேதுபதி குப்பை தொட்டி காணவில்லை என புகார் அளித்து, போலீஸ் கவனத்தை ஈர்த்து, அனுராக் காஷ்யப் கண்டுபிடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் ட்விஸ்ட்...

Video Thumbnail

மகாராஜா - மகாராஜா - விமர்சனம் & ரேட்டிங்

நடிகர் விஜய்  சேதுபதியின் 50வது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைப்பு தான் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு சராசரியாக (3.5/5) ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக அமைந்து விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தை பலர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Video Thumbnail

மகாராஜா - மகாராஜா வசூல்

2024 ஜூன் 14ல் வெளியான 'மகாராஜா' திரைப்படம் வெளியான 4 தினங்களில் 40 கோடிகள் வசூலை நெருங்கியுள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் வெளியான இப்படம், பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பலர் ரசனையில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்பயணத்திற்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது.


Video Thumbnail

லால் சலாம் - லால் சலாம்

லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், நிரோஷா என பல முன்னணி தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை கிரிக்கெட் விளையாட்டை சார்ந்த திரைக்கதையில் வடிவமைத்து இயக்கியுள்ளார், இயக்குனர். லால் சலாம் படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


சமூக கருத்துகள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக லால் சலாம் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிராவின் பாஸ்கர் எடிட்டிங் செய்துள்ளார்.


Video Thumbnail

வசூல் சாதனை - வசூல் சாதனை

ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் 2024 ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பலர் மத்தியில் பேசப்பட்டது. இப்படம் உலகளவில் மொத்தம் 36 கோடிகள் வசூலித்துள்ள நிலையில், மகாராஜா திரைப்படம் ரிலீஸான 4 தினங்களில் 40 கோடிகள் வசூலை நெருங்கியுள்ளது. இதன் மூலம் ரஜினி பட மொத்த வசூலையும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் எளிதில் முந்தியுள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+