twitter
    X
    Home சினி தரவரிசை

    2022ல் தமிழில் ட்ரெண்டான பான் இந்திய டப்பிங் பாடல்கள்

    Author Sakthi Harinath | Published: Friday, December 9, 2022, 04:35 PM [IST]

    இந்த 2022ஆம் ஆண்டு பல பான் இந்திய திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பிரபலமாகி உள்ளது. இந்த பட்டியலில் 2022ல் தமிழில் ட்ரெண்டான பான் இந்திய டப்பிங் பாடல்கள் உள்ளன. தமிழ் ரசிகர்கள் கொண்டாடி சமூக வலைத்தளத்தில் வைரலாக்கிய பான் இந்திய திரைப்பட பாடல்கள் இங்கு உள்ளது. முழு விவரங்கள் இதோ.

    cover image

    கே ஜி எஃப் (சேப்டர் 2)

    இந்த ஆண்டு 2022ல் இந்திய அளவில் ஒரு சூறாவளி போல வசூல் கலெக்ஷன்ஸ் செய்து அசத்திய திரைப்படம், கே ஜி எஃப் 2. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'டூஃபாண்' பாடல் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து பிரபலமான திரைப்பாடல்.

    கே ஜி எஃப் (சேப்டர் 2)

    கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் காதல் பாடலான 'மெஹபூபா' பாடல் இந்திய அளவில் பிரபலமான பாடலாகும். இணையதள சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி ட்ரெண்ட் செய்துள்ளனர்.

    தி வாரியர்

    இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு படமாக உருவாகி, பின் தமிழில் டப் செய்யப்பட்ட 'தி வாரியார்' படத்தின் புல்லட் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். இந்த பாடலுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டா மற்றும் முகநூல் பக்கங்களில் பலர் இப்பாடலுக்கு நடனமாடுவது போல மீம்ஸ் மற்றும் ரீலிஸ் வெளியாகி பிரபலமானது.

    சீதா ராமம்

    ஒரு பான் இந்திய காதல் படமாக வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம், சீதா ராமம். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம். இப்படத்தின் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடல்கள், இருப்பினும் இந்த படத்தின் 'கண்ணுக்குள்ளே' திரைப்பாடல் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

    ஆர் ஆர் ஆர் - (இரத்தம் ரணம் ரௌத்திரம்)

    ஆர் ஆர் ஆர் - தெலுங்கு சினிமாவில் இருந்து பிரமாண்ட படைப்பாக உருவாக்கப்பட்டு உலகளவில் பிரமாண்ட வசூல் படைத்துள்ள திரைப்படம். இப்படத்தினை ராஜமௌலி இயக்க, ராமச்சரன் மற்றும் என் டி ஆர் நடித்துள்ளனர். இப்படத்தின் இடம் பெற்றுள்ள 'நாட்டு கூத்து' பாடல் திரைரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டாடப்பட்ட பாடலாகும். பல ரசிகர்கள் இந்த பாடலை போன்று இணையதளத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.

     

    ராதே ஷ்யாம்

    இந்த ஆண்டு பான் இந்திய படமாக பெரிய அளவு பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வெளியான காதல் திரைப்படம், ராதே ஷியாம். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடலான 'ஆஹூழிலே' பாடல் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான பாடலாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

    கே ஜி எஃப் (சேப்டர் 2)

    கே ஜி எஃப் திரைப்படம் ஒரு அதிரடி திரைக்கதையில் உருவாகி பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தாலும், அம்மா செண்டிமெண்ட்-ல் பட்டைய கிளப்பிய திரைப்படம். இப்படத்தின் 'அகிலம் நீ' பாடல் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலின் இசை பலரின் மனதை கவர்ந்து அம்மா பாசத்தில் கட்டி அணைத்துள்ளது.

    சீதா ராமம்

    ஒரு காதல் படமாக வெளியாகி பலரின் கவனத்தில் பிரபலமான படம், சீதா ராமம். இந்த படத்தின் இடம் பெற்ற 'குருமுகில்' பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். பல காதல் ஜோடிகள் மத்தியில் இந்த பாடல்  ட்ரெண்ட் ஆகி கொண்டாடப்பட்டது.

    ராதே ஷ்யாம்

    ஹிந்தி சினிமாவில் இருந்து ஒரு பான் இந்திய படமாக வெளியாகி பலரால் கொண்டாடப்பட்ட படம், பிரம்மாஸ்திர. இப்படத்தின் இடம்பெற்ற 'தீ திரியே' பாடல் தமிழ் சினிமாவில் கொண்டாப்பட்டுள்ளது. 

    காந்தாரா

    காந்தாரா - கன்னட சினிமாவில் இருந்து வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம். இந்த படத்தின் பாடல்கள் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமாகியுள்ளது. பல பாடல்கள் இந்த படத்தின் மூலம் ட்ரெண்ட் ஆகியுள்ளது. முக்கியமாக இந்த படத்தின் 'வராக ரூபம்' திரைப்பாடல் இந்த படத்திற்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X