twitter
    X
    Home சினி தரவரிசை

    தமிழ் திரையில் பிரபலமாகியுள்ள தந்தை கதாபாத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Sunday, June 18, 2023, 01:07 PM [IST]

    தமிழ் திரையில் பிரபலமாகியுள்ள தந்தை கதாபாத்திரங்கள் மற்றும் அந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றுள்ள தமிழ் முன்னணி நடிகர்கள் சிலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி நடிகர்களின் விவரங்கள் மற்றும் அந்த கதாபாத்திரத்தின் சிறப்புக்கள் என இந்த பட்டியலில் உள்ளது. தமிழ் திரையுலகில் தந்தை கதாபாத்திரத்திற்காக பிரபலமாகியுள்ள தெய்வத்திருமகள், முத்துக்கு முத்தாக, தவமாய் தவமிருந்து என பல வெற்றி படங்கள் மற்றும் அப்படங்களை தனது நடிப்பின் மூலம் தாங்கிய நடிகர்கள் இங்கு உள்ளனர்.

    cover image
    தெய்வத்திருமகள்

    தெய்வத்திருமகள்

    1

    ஐந்து வயது மனவளர்ச்சி கொண்ட ஒரு தந்தை (கிருஷ்ணா) கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்து இப்படத்தின் மூலம் பெரிய அளவில் புகழ் பெற்றார். இவர் நடித்த இந்த கதாபாத்திரம் பல துறைகளில் பல்வேறு விருதுகளை வென்று பிரபலமாகியுள்ளது. நடிகர் விக்ரம் ஒரு தனி ஆளாக இப்படத்தில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி முழு புகழையும் தன் வசப்படுத்தியுள்ளார்.

    சந்தோஷ் சுப்பிரமணியம்

    சந்தோஷ் சுப்பிரமணியம்

    2

    தனது குடும்பத்தின் மேல் மிகுந்த அக்கறையுடன் குடுமத்தின் நலத்திற்காக தனி ஆளாக போராடி ஜெயித்து சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்திற்கு கொண்டு வந்துள்ள ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படமானது தந்தை மற்றும் மகனுக்கு இடையில் நடக்கும் சில கருத்துவேறுபாடுகளை அடிப்படையினை கொண்டுள்ளது. தனது தந்தையின் மிகுந்த அக்கரையில் ஒரு மகனாக ஜெயம் ரவி இழந்த சிறிய சிறிய சந்தோசங்கள் அதற்காக இவர் படும் கஷ்டம் என இப்படத்தில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.

    எம்டன் -மகன்

    எம்டன் -மகன்

    3

    எந்த ஒரு பின்னணி வாழ்க்கை இல்லாமல் தனியாக கஷ்டப்பட்டு சமூகத்தில் ஒரு நிலைக்கு வந்துள்ள நாசர், தனது கஷ்டத்தினை மகன் பரத்-திற்கு பக்குவமாக எடுத்துரைக்க தெரியாமல், தனது ஆதிக்காதல் வெளிப்படுத்திகிறார். சர்வாதிகாரமாக தோன்றும் இவரது நடவெடிக்கையை எதிர்க்காமல் பழகி வாழும் குடும்பத்தார்கள் நிலையை பற்றி கூறுவதே இப்படத்தின் கதை.

    முத்துக்கு  முத்தாக

    முத்துக்கு முத்தாக

    4

    ஐந்து மகன்களை பெற்று மிகுந்த அக்கறையுடன் வளர்க்கும் ஒரு அப்பாவி தாய் தந்தை பற்றிய திரைப்படம். தனது பிள்ளைகளுக்கு தங்களால் முயன்ற அணைத்து சந்தோசங்களை அளித்து மகிழ்ச்சியை வாழும் குடும்பம், தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு பின்னர் அவர்களின் செயல்களில் நடக்கும் சில மாற்றங்களால் ஏமாற்றம் அடைந்த அந்த தந்தையின் நிலை என இப்படம் கூறுகிறது.

    பேரன்பு

    பேரன்பு

    5

    மனவளர்ச்சி இல்லாத பக்கவாதம் கொண்டு பிறக்கும் ஒரு பெண்ணை பற்றிய கதை, இந்த பெண்ணை பராமரிக்க முடியாமல் பாதியில் விட்டு பிரியும் தாய், பின் வெளிநாட்டில் வேலை செய்யும் அந்த பெண்ணின் அந்த பெண்ணிற்காக போராடி வாழ்வதே இப்படத்தின் கதை. ஒரு இன்பமான தந்தை கதாபாத்திரத்தில் நடிங்கர் மம்மூட்டி இப்படத்தில் நடித்து பல பாராட்டுகளை வென்றுள்ளார்.

    தவமாய் தவமிருந்து

    தவமாய் தவமிருந்து

    6

    இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்றெடுக்கும் ஒரு ஜோடி அந்த பிள்ளைகளின் வாழ்க்கைக்காக போராடுவதே இப்படத்தின் கதை. ஒரு அப்பாவி தந்தையாக இப்படத்தில் ராஜ்கிரண் நடித்துள்ளார். இவரின் பிள்ளைகளின் நலனிற்காக இவர் படும் கஷ்டங்கள் மற்றும் இவரது தயாகங்கள் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது.

    இந்தியன்

    இந்தியன்

    7

    சுந்தந்திர போராட்டத்தில் நாட்டிற்காக போராடும் ஒரு தைரியமான நேர்மையான போராளி (சேனாபதி) கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்துள்ளார். இவர் தனது மகன், மகள், மனைவி என அமைதியாக வாழும் சேதுபதியின் குடும்பம், சில அரசு அதிகாரிகளால் நாசமாகிறது. இதற்காக இவர் மீண்டும் சுந்தந்திர போராளியாக போராடுகிறார். இவரின் கதாபாத்திரத்தின் அழுத்தமே இப்படத்தின் புகழ்.

    தேவர் மகன்

    தேவர் மகன்

    8

    திரைவாழ்வில் தந்தை கதாபாத்திரத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும் ஒரு தைரியமான குணச்சித்திர கதாபாத்திரம் என இப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பிரபலமாகியுள்ளார். இப்படம் ஆஸ்கார் விருத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் சிவாஜியின் கதாபாத்திரம் இன்றும் ரசிர்களால் போற்றப்படுகிறது.

    வரலாறு

    வரலாறு

    9

    நடிகர் அஜித் தைரியமாக தனது திரைவாழ்வில் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் இது. இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்தற்காக இவர் பிலிம்பேர் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். இத்திரைப்படமானது இவரது திரைவாழ்வில் ஒரு முக்கிய திரைப்படம், மற்றும் ஒரு நடிகனாக தமிழ் திரையுலகில் பல கௌரவத்தினை இப்படமானது நடிகர் அஜித்-திற்கு பெற்று தந்துள்ளது.

    மிஸ்டர். பாரத்

    மிஸ்டர். பாரத்

    10

    ரஜினி மற்றும் சத்யராஜ் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ள ஒரு மாபெரும் வெற்றி பெற்றுள்ள படமாகும். இப்படத்தில் நடிகர் சத்யராஜ்யின் கதாபாத்திரம் ஒரு வில்லன் குணங்களை கொண்டுள்ளதாக இருந்தாலும், இப்படத்தின் சுவாரஸ்யத்திற்கு இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரமே முக்கிய காரணம்.

    வாரணம் ஆயிரம்

    வாரணம் ஆயிரம்

    11

    நடிகர் சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், பல எதிர்பார்ப்பில் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம். இப்படத்தில் சூர்யாதந்தை மற்றும் மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் தந்தை கதாபாத்திரம் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய பங்காக மாறியுள்ளது. இவர் இப்படத்தில் நடித்தற்காக பல விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றுள்ளார். 

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X