twitter
    X
    Home சினி தரவரிசை

    உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் வெளியான பிரபல டாப் 15 பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, November 7, 2022, 09:25 AM [IST]

    உலகநாயகன் கமல்ஹாசன் குரலில் வெளியான பிரபல டாப் 15 பாடல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து பிரபலமான கமல் ஹாசன், திரைக்கதை, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரைத்துறையில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். இங்கு நடிகர் கமல் ஹாசன் பாடிய திரைப்பாடல்களில் 15 சிறந்த பாடல்கள் சில உள்ளன.

    cover image

    விஸ்வரூபம்

    விசுவரூபம் 2013 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் விஸ்வரூபம் எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவில்...

    மன்மதன் அம்பு

    மன்மதன் அம்பு 2010ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைக் கலந்த காதல் திரைப்படமாகும். கதை கமல்ஹாசனால் எழுதப்பட்டு, கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்பட்டது. இப்படத்தில் மாதவன், திரிஷா, சங்கீதா ஆகியோர் முக்கியமான வேடத்திலும் ரமேஷ் அரவிந்த், மஞ்சு பிள்ளை, ஊர்வசி ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு...

    தசாவதாரம்

    தசாவதாரம் 2008-ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் திரைப்படம். இத்திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க, கமல் ஹாசன் பத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். இவருடன் அசின் மற்றும் மல்லிகா ஷெராவத் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    விருமாண்டி

    விருமாண்டி நடிகர், இயக்குனர் என பல திறமை கொண்ட கமல் ஹாசன் அவர்கள் தானே இயக்கி, தயாரித்து நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருடன், பசுபதி, நெப்போலியன், அபிராமி, நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    வசூல் ராஜா எம் பி பி எஸ்

    வசூல் ராஜா எம் பி பி எஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில், கமல் ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்

    அன்பே சிவம்

    அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கமல் ஹாசன், கிரண் ரத்தோட், மாதவன் நடித்த அதிரடி காதல் திரைப்படம். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

    ஆளவந்தான்

    ஆளவந்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா, ரவீனா தண்டொன் மற்றும் பலர் நடித்த அதிரடி திரில்லர் திரைப்படம்.

    தெனாலி

    தெனாலி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். கமல் ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி, டெல்லி கணேஷ், மீனா, மதன் பாப் மற்றும் சார்லி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

    சதி லீலாவதி

    சதி லீலாவதி இயக்குனர் பாலு மஹேந்திரா இயக்கத்தில், கமல் ஹாசன், ரமேஷ் அர்விந்த், கோவை சரளா, கல்பனா மற்றும் பலர் நடித்த நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    தேவர் மகன்

    தேவர் மகன் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    குணா

    குணா இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில், கமல் ஹாசன், ரோஷினி, ரேகா, எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    மைக்கேல் மதன காமராஜன்

    மைக்கேல் மதன காமராஜன் இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல் ஹாசன், ஊர்வசி, குஷ்பு, மனோரமா, நாகேஷ் மற்றும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன் நான்கு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தினை கமல் ஹாசன் தானே தயாரிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். 

    அபூர்வ சகோதரர்கள்

    அபூர்வ சகோதரர்கள் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் ஹாசன் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இப்படத்தினை நடிகர் கமல் தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

    நாயகன்

    நாயகன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் முக்த ஸ்ரீநிவாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.இப்படமானது மாநில அளவிலும் தேசிய அளவில் பல விருதுகளை வென்றுள்ளது, பின்னர் சர்வதேச ஆஸ்கார் விருதிற்காக...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X