twitter
    X
    Home சினி தரவரிசை

    விஜய், உதயநிதி முதல் எம் ஜி ஆர்: சினிமா மூலம் அரசியலில் உள்ள முக்கிய தமிழ் பிரபலங்கள்

    Author Sakthi Harinath | Updated: Monday, February 5, 2024, 01:11 PM [IST]

    விஜய், உதயநிதி முதல் எம் ஜி ஆர்: சினிமா மூலம் அரசியலில் உள்ள முக்கிய தமிழ் பிரபலங்கள். சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருந்தாலும் நாளடைவில் அது மக்களிடம் செல்வாக்கை பெறுவதற்கான கருவியாக கருதப்படுகிறது. இந்த பதிவில் தமிழ் சினிமாவில் நாயகன், நாயகியாகவும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்தும் மக்களின் அன்பையும், செல்வாக்கையும் பெற்று அதனை கொண்டு அரசியலில் பணியாற்றி வெற்றி பெற்ற தமிழ் பிரபலங்கள் சிலர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசியல் செய்துள்ள ஜெ. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின், விஜய் என பல முக்கிய பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    cover image

    1

    நடிகனாக தமிழில் அறிமுகமாகி தனது பிரபலத்தால் அரசியலுக்குள் ஒரு சாம்ராஞ்சியம் அமைத்தவர். இவர் 3முறை தொடர்ந்து முதல் அமைச்சராக தமிழகத்தில் பணியாற்றியுள்ளார். பின்னர் பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

    2

    தமிழக முதல்வராக பணியாற்றி புகழ் பெற்றவர். இவர் 5 முறை முதலமைச்சராக தமிழகத்தில் பணியாற்றியுள்ளார்.

    3

    திரைப்படங்களில் நடித்து தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தில் தலைவராக பணியாற்றி தமிழ் திரையுலகின் கடன்களை அடைந்தவர். பின்னர் அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள இவர் அரசியலிலும் ஒரு கட்சியினை தொடங்கி பணியாற்றி வந்துள்ளார்.

    4

    இயக்குனர், நடிகர் என தமிழ் திரைப்படங்களில் பல சமுதாயத்திற்கு தேவையான வசனங்கள் மற்றும் உணர்ச்சிகளில் நடித்து வந்துள்ள இவர், "நாம் தமிழர்" என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் பணியாற்றி வருகிறார்.

    5

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து புகழ் பெற்ற இவர், அந்த புகழினை கொண்டு அரசியலில் இணைந்து பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல்வாதியாகவும் நடிகனாகவும் பணியாற்றிவருகிறார்.

    6

    பிரபல தமிழ் திரைப்பட நடிகராக தமிழகத்தில் புகழ் பெற்ற இவர், இந்த செல்வாக்கை கொண்டு அரசியலிலும் சாதித்துள்ளார்.

    7

    தமிழில் 1990 காலகட்டங்களில் பிரபல நடிகராக பணியாற்றிய இவர், பின்னர் அரசியலில் இணைந்துள்ளார். அரசியலில் இவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் சர்ச்சை சிக்கி விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

    8

    திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இவர், அரசியலிலும் இணைந்து புகழ் பெற்றுள்ளார்.

    9

    திரைப்படங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் சர்ச்சையாக பேசுவது மற்றும் அரசியல் சார்ந்து நடக்கும் தவறுகளுக்கு கருத்து தெரிவிப்பது என பல விமர்சங்களில் சிக்கி பிரபலமாகியுள்ளார்.

    10

    நாயகியாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் பணியாற்றி வருகிறார்.

    11

    1960ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். 100க்கு பல திரைப்படங்களில் நாயகனாக நடித்து புகழ் பெற்ற இவர், அரசியல் ரீதியாக பல கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார். பின்னர் "மக்கள் நீதி மையம்" என்ற கட்சியினை துவங்கி தமிழகத்தில் பணியாற்றி வருகிறார்.

    12

    திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற உதயநிதி ஸ்டாலின் தற்போது தி.மு.க இணைந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார். இவரின் தாத்தா, தந்தை போல இவரும் அதே காட்சியில் முக்கிய தலைவராக பதவியேற்றுள்ளார்.   

    13

    தமிழ் சினிமாவில் முன்னணி முக்கிய நடிகராக பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சியை பதிவு செய்து 2024ஆம் ஆண்டு பிப் மாதம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X