twitter
    X
    Home சினி தரவரிசை

    ரசிகர்கள் அறிய வேண்டிய நம் சின்ன கலைவாணர் விவேக் பற்றிய 10 அரிய தகவல்கள்

    Author Sakthi Harinath | Published: Saturday, November 19, 2022, 06:38 PM [IST]

    பல கனவுகளோடு தமிழ் திரையுலகில் பணியாற்ற தொடங்கி ஒரு நடிகனாகவும் நல்ல மனிதராகவும் பல ரசிகர்களின் மனதை வென்று, தமிழ் சினிமாவில் 'சின்ன கலைவாணர்' என புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன. ரசிகர்கள் அறிய வேண்டிய நம் சின்ன கலைவாணர் விவேக் பற்றிய 10 அரிய தகவல்கள் இதோ.

    cover image

    1

    விவேக், தன்னுடைய ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

    2

    1990 முதல் 1998 வரை 8 ஆண்டுகள் நடிகர் விவேக் LIC பாலிசிகளில் வேலை செய்துள்ளார்.

    3

    பஜேரோ என்னும் வாகனத்தை தமிழகத்தில் முதலில் வாங்கிய நபர் ஆவார், சின்ன கலைவாணர்

    4

    ஒரு நகைச்சுவையாளராக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற விவேக், ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்னும் கனவுகளோடு திரையுலகில் பணியாற்ற வந்தார்.

    5

    இயக்குனர் கே பாலச்சந்தர் 1987 ஆம் ஆண்டு இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில், நம் சின்ன கலைவாணர் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

    6

    1984ல் நடிகர் விவேக், மதுரை கிளை இந்தியன் வங்கியில் சொந்தமாக 50 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருந்தார், அதே வங்கியில் 2018ஆம் ஆண்டு 4 கோடிகளுக்கு மேல் இருப்பு தொகை வைத்துள்ளார்.

    7

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சொல்லுக்கு அடிபணிந்து பூமியில் மரம் நடவேண்டும் என தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு செயல்பட்டவர், சின்ன கலைவாணர். இதுவரை இவர் சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.

    8

    நடிகர் விவேக்-ன் திரைப்பயணத்தில் இவர் தன் 50வது திரைப்படத்தை 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடித்துள்ளார்.  

    9

    படங்களில் நடிகராக நடிப்பது மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் மிராண்டா மற்றும் பிரபல நகை நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இருந்துள்ளார். இந்த நிறுவனங்களுக்காக பல விளம்பர படங்களை நடித்துள்ளார், விவேக். 

    10

    கண்டேன் சீதை மற்றும் சீனு ஆகிய திரைப்படங்கள் நடிகர் விவேக்கின் 30 நிமிட நகைச்சுவை காட்சிகளுக்காக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

    11

    விவேக் - தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் திரைப்படங்களில் நடிகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாக பிரபலமானவர். நடிகர் விவேக் இவர் நடிக்கும் திரைப்படங்களில் நகைச்சுவையாக இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் 'சின்னக் கலைவாணர்' என்றும் ...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X