twitter
    X
    Home சினி தரவரிசை

    '96' படத்தில் இடம் பெற்ற பாடகி எஸ் ஜானகி அம்மாவின் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, October 4, 2022, 04:57 PM [IST]

    சமீபத்தில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட காதல் திரைப்படம் 96. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முன்னணி நடிப்பில் வெளியான இப்படம், தமிழில் பிரமாண்ட வெற்றி பெற்று புகழ் பெற்றது. இப்படத்தினை பின்னர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் படமாக உருவாக்கியுள்ளனர் திரையுலக பிரபலங்கள். காதல் கதையாக உருவான இப்படத்தில் எஸ் ஜானகி பாடிய பழைய பாடல்கள் சில இப்படத்தில் இடம் பெற்று இப்படத்திற்கு அழகினை உயர்த்தியுள்ளது. இந்த தொகுப்பில் '96' படத்தில் இடம் பெற்றுள்ள பிரபல பாடகர் எஸ் ஜானகி பாடிய பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image

    அலைகள் ஓய்வதில்லை - புத்தம் புது காலை

    பாடலாசிரியர் கங்கை அமரன் பாடல் வரிகளில் இளையராஜா இசையில் உருவான காதல் பாடல். கார்த்தி மற்றும் ராதா முன்னணி நடிப்பில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

    ரெட்டை வால் குருவி - கண்ணன் வந்து பாடுகிறான்

    மைக் மோகன், ராதிகா மற்றும் அர்ச்சனா நடிப்பில் உருவான ரெட்டை வால் குருவி படத்தில் பாடலாசிரியர் வாலி பாடல் வரிகளில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது.

    அவதாரம் - தென்றல் வந்து தீண்டும்போது

    கவிஞர் வாலி வரிகளில் இளைஞராக இசையில் எஸ் ஜானகி குரலில் பிரபலமான பாடல். இப்பாடலுக்கு இன்றும் தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர்.

    மறுபடியும் - ஆசை அதிகம் வச்சி

    ஹிந்தி படமான 'மகேஷ் பட்' படத்தின் தமிழ் ரீமேக் படம் தான் இந்த 'மறுபடியும்' திரைப்படம்.  நிழல்கள் ரவி, ரேவதி முன்னணி நடிப்பில் வெளியான இப்படம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானது.

    தளபதி - யமுனை ஆற்றிலே

    அதிரடி படமாக உருவான இப்படம், பல ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அணைத்தும் ரசிகர்களின் ஆதரவில் பிரபலமானது. குறிப்பாக 'யமுனை ஆற்றிலே' மற்றும் 'ராக்கம்மா கைய வச்சா' பாடல்கள்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X