எவிக்ஷன் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்: முழு பட்டியல்

  உலகளவில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகச்சியில் இதுவரை எவிக்ஷன் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேரடியாக வெளியேறிய போட்டியாளர்களின் முழு லிஸ்ட் இங்கு உள்ளன. இந்த பட்டியலில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நேரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் மட்டுமே உள்ளது. முழு விவரங்கள் இதோ.

  ஸ்ரீ - தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஆவார். இவர் தமிழ் பிக்பாஸ் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று எவிக்ஷன் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். தன் வீட்டை விட்டு நான் பிரிந்தது இல்லை என சில காரணங்களை கூறிவிட்டு, இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் இல்லத்தில் நுழைந்த முதல் வாரத்திலையே இவர் வெளியேறி மக்களின் கவனத்தை கூட இவர் பெறவில்லை.

  Complete: Sri Biography

  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பணியாற்றி பிரபலமானவர், பரணி. இவர் நாடோடிகள், கல்லூரி, வெற்றிவேல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார். தமிழ் பிக்பாஸ் சீசன் 01 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற இவர், எவிக்ஷன் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேரடியாக வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இவரை காரணமின்றி பலர் ஒதுக்கி வைத்ததே இதற்கு காரணம் என கூறினார். இவருக்கு ஆதரவாக இணையத்தில் 'பரணி ரன்' என செல்போன் கேம்ஸ் வெளியாகி பலர் மத்தியில் வைரலானது.

  Complete: Bharani Biography

  ஓவியா - தமிழ் & மலையாள திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழில் களவாணி, கலகலப்பு என பல வெற்றி படங்களில் நடித்து பலர் மத்தியில் கொண்டாடப்பட்டவர். நடிகை ஓவியா தமிழ் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்து புகழ் பெற்றுள்ளார். 'ஓவியா ஆர்மி' என ஒரு பட்டாளமே இவருக்கு ஆதரவு அளித்துள்ளது. தமிழ் பிக்பாஸ் இல்லத்திற்குள் இவருக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து ஓவியாவிற்கு ஆதரவாக பல குரல்கள் சமூகத்தில் எதிரொலித்தது. பின் இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி திடீரென தமிழ் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

  மஹத் ராகவேந்திரா - தமிழ் சினிமாவின் நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 02 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். தமிழ் சீசன் 02 நிகழ்ச்சியில் இருந்து இவர் 10 வாரங்களுக்கு பின் வீட்டில் இருந்து ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்டார். சக போட்டியாளரிடம் தகராறு செய்ததே இதற்கு காரணம் என பிக்பாஸ் தரப்பில் அறிவிப்புகள் வெளியானது.

  சரவணன் - தமிழ் திரையுலகில் பலரால் கொண்டாடப்படும் நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நாயகனாகவும் பின் துணை நடிகராகவும் நடித்து புகழ் பெற்றவர். இவரது திரைவாழ்வில் பருத்தி வீரன், பொண்டாட்டி தாசன், கடைக்குட்டி சிங்கம் என பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படங்களாகும். இவர் பிக்பாஸ் சீசன் 03 நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமானார். தீடிரென இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் சர்ச்சைக்குரிய சில விஷயங்களை வெளிப்படையாக கூறியதே இதற்கு காரணம், என்றனர் பிக்பாஸ். 

   

  மதுமிதா - ஜாங்கிரி மதுமிதா என பலரால் அறியப்படுபவர். இவர் தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 03 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் இல்லத்திற்குள் பல சமூக விஷயங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ள இவர், சில சர்ச்சை பேச்சுகளை பற்றி பேசியதற்காக இவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து எவிக்ஷன் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்.

  பிக்பாஸ் சீசன் 05 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற நமிதா சில காரணங்களால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற முதல் திருநங்கை ஆவார், நமிதா. உடல்நல குறைவு காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என பிக்பாஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகின.

  ஜி பி முத்து - யூ டியூப் மூலம் பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமானவர். டிக்டாக் போன்ற செயலியில் தொடர்ந்து நகைச்சுவை வசனங்கள் உடைய பல வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ள இவர், பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்தார். இவரின் பிக்பாஸ் வருகை பல ரசிகர்களுக்கு ஆனந்தமாக மாறியது. பிக்பாஸ் வீட்டில் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருந்த இவர், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகன் ஆவார். சில காரணங்களால் ஜி பி முத்து திடீரென பிக்பாஸ்  இல்லத்தில் இருந்து வெளியேறினார்.

  Complete: GP Muthu Biography

  Related Lists