twitter
    X
    Home சினி தரவரிசை

    கே எஸ் ரவிகுமார் இயக்கிய சிறந்த 10 திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, May 30, 2023, 01:26 PM [IST]

    திரைப்படங்கள் பொழுபோக்கிற்கு தான். நாம் திரைப்படத்தை பார்க்கும் 2 மணி நேரமும் எல்லா கவலையையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இயக்குனர்கள் திரைப்படங்களை இயக்குகின்றனர். மகிழ்ச்சியை வரவழைக்க ஒரு படம் நகைச்சுவையாகவும், குடும்ப படமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், 90 களிலிருந்தே அத்தகைய படங்களை நமக்கு அளித்ததில் பெரும் பங்கு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருக்கு உண்டு. அவரின் சில சிறந்த படங்கள் தான் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    cover image
    தசாவதாரம்

    தசாவதாரம்

    1

    10 வெவ்வேறு கதாபாத்திரங்களில், வெவ்வேறு தோற்றங்களுடன் கமல் ஹாசன் நடித்து வெற்றியடைந்த திரைப்படம்.

    வரலாறு

    வரலாறு

    2

    அஜித் குமார் 3 கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை வென்ற திரைப்படம். 

    வில்லன்

    வில்லன்

    3

    வில்லன் மோசடியால் மற்றவர்களிடம் இருந்து சம்பாதிக்கும் பணத்தினை நல்ல விஷயங்களுக்கு செலவழிக்கும் திரைக்கதையில்  வெற்றியடைந்த திரைப்படம்.

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    4

    கமல் ஹாசன் மற்றும் அவரது 4 நண்பர்கள் ஒரு தவறினை மறைக்க மேலும் மேலும் செய்யும் தவறுகளை நகைச்சுவையாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

    படையப்பா

    படையப்பா

    5

    படையப்பா ஊரில் பெரிய தலைகாட்டான சிவாஜி குடும்பத்தில் பிறந்த ரஜினியை ஒரு தலையாக காதலித்து, காதல் தோல்வியால் தான் காதலித்தவரின் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இச்சம்பவமானது 30 வருடங்களுக்கு பின்னரும் பழிவாங்கும் படலமாக தொடர்கிறது.

    மின்சார கண்ணா

    மின்சார கண்ணா

    6

    2020-ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் விருதினை பெற்ற "பாராசைட்" என்ற கொரியன் திரைப்படத்தின் கதை இப்படத்தின் கதையை கொண்டுள்ளதால் இப்படம் 2020-ம் ஆண்டு பலரால் விமர்சிக்கப் பட்டு சர்ச்சைக்கு உள்ளானது. தமிழ் திரையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் பங்களிப்பை இப்படம் மேம்படுத்தியது.

    நட்புக்காக

    நட்புக்காக

    7

    சரத்குமார் இருவேடங்களில் நடித்த திரைப்படம். நட்பினை இலக்கணமாய் கொண்டு இத்திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

    பிஸ்தா

    பிஸ்தா

    8

    வீட்டிற்கு அடங்காத பெண்ணாக இருக்கும் நக்மா, இவரை திருமணம் புரியும் கார்த்தி பின்னர் நடக்கும் திரைக்கதையில் நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் திரைப்படம்.

    அவ்வை சண்முகி

    அவ்வை சண்முகி

    9

    இத்திரைப்படத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மீனாவும், கமழும் விவாகரத்து பெறுகின்றனர். இவர்களின் மகள் மீனாவிடம் வளர அரசு தீர்ப்பளிக்கிறது, தன் மகள் மேல் அதிக பாசம் கொண்ட கமல் மகளை காண மீனா வீட்டிற்கு பெண் வேடமிட்டு பணிப்பெண்ணாக செல்கிறார். பின்னர் அங்கு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    முத்து

    முத்து

    10

    முத்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய குடும்பம் மற்றும் நகைச்சுவை திரைப்படம். தனது சொத்துக்களை ஊருக்கும் குடுபத்திற்கும் எழுதிவைத்துவிட்டு செல்லும் நாயகனின் மகன் அக்குடும்பத்திற்கு விஸ்வாசமுடன் வேலைக்காரனாக பணியாற்றி வருகிறார். பின்னர் இவரின் ஜனனம் குறித்து கண்டறிகிறார். இத்திரைக்கதையை சுவரசியமுடன் கூறியுள்ளார் இயக்குனர்.

    நாட்டாமை

    நாட்டாமை

    11

    நாட்டாமை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கிய நடிகர் சரத்குமார் இருவேடங்களில் நடித்த குடும்பத்திரைப்படம். 

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X