twitter
    X
    Home சினி தரவரிசை

    சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் டாப் 9 போட்டியாளர்கள்

    Author Sakthi Harinath | Updated: Thursday, November 11, 2021, 02:37 PM [IST]

    சூப்பர் சிங்கர் சீசன் 8 டாப் போட்டியாளர்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற பிரபலமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் டாப் 9 போட்டியாளர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

    cover image

    1

    அபிலாஷ் வெங்கிடாசலம், கேரளா மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டுள்ள இவர், ஸ்டார் சிங்கர் என்னும் மலையாள இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர். தற்போது 2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு முன்னணி போட்டியாளராக புகழ் பெற்றுள்ளார். பல மேடைகளிலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ள அபிலாஷ், தமிழ் மற்றும் மலையாள சினிமா இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ், துளு, ஆங்கிலம், மற்றும் ஹிந்தி மொழிகளை சரலகமாக பேசும் திறனுள்ளவர்.

    2

    பாரத் ராஜேஷ், தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் ஆவார். இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'நான் சிரித்தால்' படத்தில் இடம் பெற்ற பிரேக்ஆஃ பாடலை பாடகர் சுதர்சன் மற்றும் சந்தோஷ் உடன் இணைந்து இவரும் பாடியுள்ளார். பாரத் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் சிங்கர் 4 நிகழிச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்த வெற்றியாளர். பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி பாடல்களை பாடிவருகிறார்.

    3

    அணு ஆனந்த், தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் ஆவார். இவர் இதுவரை நான்கு தமிழ் பாடல்களையும், ஒரு தெலுங்கு பாடலையும் பாடியுள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படத்தில் இடம் பெற்ற எனக்காக பொறந்தாயே, உனக்காக பொறந்தேனே பாடலை பாடி புகழ் பெற்றவர். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் ஒரு முக்கிய போட்டியாளர் ஆவார். 

    4

    மானசி, திரைப்பட பின்னணி பாடகர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர் ஆவார். மானசி கர்னாடிக் மற்றும் பாஜன் இசையை முறையாய் கற்றறிந்து பாடுகிறார். 2017ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சி 1 லட்சம் ரூபாய் இவரது குரலுக்கு பரிசளித்துள்ளது.

    5

    முத்து சிற்பி - மேடை நாடக கலைஞர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஒரு முக்கிய போட்டியாளராக பிரபலமாகி, தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாரதர் வேடமிட்டு பாடிய பாடல் மிகவும் பிரபலாமானது. இதனை தொடர்ந்து இவர் முத்து சிற்பி நாரதர் என்னும் புனைப் பெயரை பெற்றுள்ளார்.

    6

    அய்யனார், 2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களின் கவனத்தில் பிரபலாமானவர். இவர் ராப் பாடலை பாடும் திறன் கொண்டவர். இவர் சமூக பிரச்சனைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு உடைய பல பாடல்களை இவரது பாணியில் ஒரு ராப் பாடலாக பாடி வருகிறார்.

    7

    ஆர் கே ஆதித்யா கிருஷ்ணன், தமிழ் சினிமாவின் பின்னணி பாடகர் ஆவார். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் ஒரு முக்கிய போட்டியாளர். ஆதித்யா பல பாடல்களை தனது ஸ்டைலில் பாடியும், இசையமைத்தும் தனது யூ டியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மீரா கிருஷ்ணனின் மகன் ஆவார்.

    8

    ஸ்ரீதர் சேனா இந்திய சினிமாவின் பின்னணி பாடகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார்.

    9

    அரவிந்த் கர்ணீஸ்வரன் - சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 9 போட்டியாளர்களில் இவரும் ஒருவராவார். அரவிந்த் பல மேடை நிகழ்ச்சிகளிலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எஸ் பி பாலசுப்ரமணியம் நிகழ்ச்சியிலும், எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரு காவியம், மற்றும் மலேசிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற பிரபலம் ஆவார். இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X