twitter
    X
    Home சினி தரவரிசை

    திருமணத்திற்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Published: Monday, August 8, 2022, 04:20 PM [IST]

    நீண்ட நாட்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, கரீனா கபூரும் சைஃப் அலி கானும் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு நாங்கள் நீண்ட நாட்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என்று கரீனா கபூரே வெளிப்படையாக கூறியிருந்தார். இவர்களை போல திருமணத்திற்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பின் திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் இதோ.

    cover image
    போனி கபூர்

    போனி கபூர்

    1

    ஸ்ரீதேவி 'மிஸ்டர் இந்தியா' படத்தில் நடித்தபோது போனி கபூர் அவரை காதலித்தார். அப்போது போனி கபூருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது. போனியின் முதல் மனைவி மோனா கபூர். பின் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒரு வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர், பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    அமீர்கான் - கிரண் ரா

    அமீர்கான் - கிரண் ரா

    2

    ரீனா தத்தாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, 2005-ம் ஆண்டு உதவி இயக்குநர் கிரண் ராவை மணந்தார் அமீர்கான். இருவரும் ஒரு வருடமாக திருமணத்திற்கு முன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நட்சத்திர திருமணம் நடந்தது.

    கரீனா கபூர்

    கரீனா கபூர்

    3

    சைஃப் அலி கானுக்கும் கரீனா கபூருக்கும் 2012 இல் திருமணம் நடந்தது. ஆனால் இருவரும் திருமணத்திற்கு முன்பே நீண்ட நாட்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இதுகுறித்து கரீனாவும் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

    அனுஷ்கா சர்மா - விராட் கோலி

    அனுஷ்கா சர்மா - விராட் கோலி

    4

    அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணத்திற்கு முன்பு நீண்ட நாட்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X