twitter
    X
    Home சினி தரவரிசை

    ஸ்போர்ட்ஸ் படங்களில் ஜொலித்த விஷ்ணு விஷால்

    Author Sakthi Harinath | Published: Tuesday, December 6, 2022, 12:55 PM [IST]

    நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகர் ஆவார். இவரது தமிழ் திரைப்பயணத்தில் இவருக்கு ஒரு அங்கீகாரம் படைத்த படங்களாக ஸ்போர்ட்ஸ் படங்கள் உள்ளன. விளையாட்டு வீரராக இவர் நடித்துள்ள திரைப்படங்கள் பலரின் கவனத்தை கவர்ந்து ஹிட் படங்களாக தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளது. தற்போது இந்த பட்டியலில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படங்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு விவரங்கள் இதோ.

    cover image
    வெண்ணிலா கபடி குழு

    வெண்ணிலா கபடி குழு

    1

    வெண்ணிலா கபடி குழு - இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி என பலர் நடிப்பில் உருவான திரைப்படம். இப்படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஒரு கபடி வீரராக இப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஹிட் படமாக பிரபலமானது.

    ஜீவா

    ஜீவா

    2

    ஜீவா - இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரராக நடித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின் இப்படத்தின் மூலம் இரண்டாம் முறையாக விஷ்ணு விஷால் - சுசீந்திரன் கூட்டணி அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பலரின் கவனத்தை கவர்ந்து இப்படம் பெரிய அளவில் பிரபலமான சூப்பர் ஹிட் படமாகும்.

    கட்டா குஸ்தி

    கட்டா குஸ்தி

    3

    கட்டா குஸ்தி - இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக இத்திரைப்படம் தொடங்கி இறுதியில் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக தமிழ் சினிமாவில் பிரபலமானது. இப்படம் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து ஹிட் படமாக புகழ் பெற்றுள்ளது.

    லால் சலாம்

    லால் சலாம்

    4

    லால் சலாம் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. இப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X