By : Filmibeat Tamil Video Team
Published : April 14, 2018, 03:15

ரஹ்மான், ராஜாவைத் தவிர தேசிய விருதுக்கு ஆளில்லையா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படத்தின் இசைக்காக யுவனுக்கு இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கலாம் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு தரமணி பாடல்கள் வெளியானதிலிருந்தே பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டன. தேசிய விருதுகள் தேர்வில் அரசியல் இருந்து வருகிறது என்கிற சர்ச்சை பல ஆண்டுகளாகவே புழங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் விருதுப் பட்டியல் அறிவிக்கப்படும்போது சர்ச்சைகள் உருவாவது வழக்கம்.

பிராந்திய மொழிப் படங்கள் பல தன்னை மிரளவைத்ததாக தேர்வுக்குழுத் தலைவர் ஷேகர் கபூர் குறிப்பிட்டதைப் பெருமையாகக் கொள்ளும் அதே நேரத்தில் இந்த ஆண்டும் விருதுத் தேர்வு தொடர்பான சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இதுவரை 5 முறை தேசிய விருது பெற்றிருக்கும் இளையராஜா, ஏற்கெனவே 4 விருதுகளைப் பெற்று தற்போது பெறவிருக்கும் 2 விருதுகளோடு இளையராஜாவை முந்தியிருக்கும் ரஹ்மான். இவர்களைத் தாண்டி மற்ற இசையமைப்பாளர்களுக்கு விருதுகள் கிடைக்கும்போது, மற்ற தமிழ் இசையமைப்பாளர்களின் இசை இன்னும் பரவலான தளங்களைச் சென்றடையும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா