Tap to Read ➤

ரஞ்சித்தின் 10 ஆண்டு படங்கள் ரிவ்யூ

தமிழ் சினிமாவில் எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் படங்களை இயக்கியும் தயாரித்தும் வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் ஒரு பார்வை
பா.ரஞ்சித் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
2012 ஆம் ஆண்டில் அட்டக்கத்தி திரைப்படம் கல்லூரி மாணவனின் வாழ்க்கையை நகைச்சுவையுடன் விளக்கும் வகையில் படமாக்கப்பட்டவிதம் வரவேற்பை பெற்றது.
ஆடிப்போனா ஆவணி, நடுக்கடலில் கப்பல் பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்து 2014 ஆம் ஆண்டில் மெட்ராஸ் என்கிற படத்தை இயக்கினார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த இப்படமும் சிறப்பாக ஓடியது. இதற்கும் சந்தோஷ் நாராயணன் இசை.
அரசியல் கட்சிகள் பதவி ஆசையால் இளைஞர்கள் வாழ்வு எப்படி பறிபோகிறது என்பதை படம் உணர்த்தியது.
2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்தை வைத்தை கபாலி படத்தை இயக்கினார். இந்தப்படம் வசூலை வாரிக்குவித்தது. இதன் மூலம் ரஞ்சித் வெற்றிப்பட இயக்குநராக அங்கிகரிக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தாராவியில் நடப்பது போன்ற கதை ரஜினியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாகும்.
நானாபடேகர் வில்லனாக நடித்த இப்படம் சிறப்பான படமாக பா.ரஞ்சித்துக்கு அமைந்தது. சந்தோஷ் நாராயணன் இசை, கபிலனின் பாடல் வரிகள் அத்தனை பாடலும் ஹிட்.
அதன் பின்னர் அதே ஆண்டில் தனது தயாரிப்பில் மாரி செல்வராஜ் என்கிற இயக்குநரை அறிமுகப்படுத்தினார். பரியேறும் பெருமாள் என்கிற படம் பெரும் வரவேற்பை பெற்றது.
மாரி செல்வராஜ் இதன் மூலம் சிறந்த இயக்குநர் வரிசையில் இடம் பிடித்தார், ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கல்வி ஒன்றே முக்கியம் என்கிற கருத்தை வைத்த படம்.
அடுத்து 2021 -ல் கொரோனா பேரிடர் காரணமாக திரயுலகமே ஸ்தம்பித்த நிலையில் மிகுந்த பிரயாசைப்பட்டு சார்ப்பட்டா பரம்பரை எனும் அற்புதமான படத்தை ஓடிடியில் வெளியிட்டார்.
குத்துச்சண்டையை அன்றைய காலக்கட்டத்தில் வடச்சென்னையை கண்முன் கொண்டு வந்து காட்டினார் ரஞ்சித். படம் பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்து தனது தயாரிப்பில் 2021-ல் ரைட்டர் எனும் படத்தை கொண்டு வந்தார். போலி என் கவுண்டருக்கு எதிரான படம் அது.
அடுத்து அவரது தயாரிப்பில் 2022 -ல் சேத்துமான் படம் வெளி வந்துள்ளது. வித்தியாசமான எளிய மக்களின் கதைதான் இது.
அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி டீமுடன் இணைந்து பேபி எனும் படத்தை கொண்டுவர உள்ளார். அட்டக்கத்தி தினேஷ், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பதால் நகைச்சுவை படமாக இருக்கும் என தெரிகிறது.
அடுத்து விக்ரம், கமல்ஹாசன் ஆகியோர் படங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.