Tap to Read ➤

எம் ஜி ஆர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

எம்ஜிஆர் நடித்த முதல் படம் - சதிலீலாவதி. வெளியான ஆண்டு 1936. 19 வயதில் அவர் ஏற்ற பாத்திரம் போலீஸ் அதிகாரி வேடம்.
எம்ஜிஆர் வில்லனாக ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் பெயர் பணக்காரி.
எம்ஜிஆர் கத்திச் சண்டை போட்டு பிரபலமான படம் ஜெனோவா. அதில் உண்மையான கத்தியுடன் மோதும் சண்டைக்காட்சி பிரபலமான ஒன்று. அதன்பின்னர் எம்ஜிஆருக்கு ஏறுமுகம்தான். இப்படம் மலையாளத்திலும் வெளியானது.
சந்திரபாபு எம்ஜிஆரை வைத்து எடுத்த படம் மாடிவீட்டு ஏழை. ஆனால் அப்படம் பாதியிலேயே நின்று போனது.
எம்ஜிஆர் பெரிதும் விரும்பி எடுக்க உத்தேசித்த படம் பொன்னியின் செல்வன். ஆனால் அது எடுக்கப்படாமலே போனது.
இக்காலக்கட்டத்தில் எம்ஜிஆருக்கு ஓடாத படம் கூண்டுக்கிளி(53 நாட்கள்) ராஜராஜன் (40 நாட்கள்) மட்டுமே. மற்றவை எல்லாம் 100 நாட்களை தாண்டி ஓடிய படங்கள் ஆகும்
மதுரை வீரன், மலைக்கள்ளன், தாய்க்குப்பின் தாரம், மகாதேவி போன்ற படங்கள் 150 நாட்களை கடந்தது. நாடோடி மன்னன் 200 நாட்கள் ஓடியது.
திரைப்படங்களில் மது, புகைபிடிக்கும் காட்சியில் நடிக்காத ஒரே நடிகர் அன்றும் இன்றும் எம்ஜிஆர் மட்டுமே.