Tap to Read ➤

தமிழ் திரையுலகின் கவர்ச்சி வில்லன் ரகுவரன் நினைவு நாள் இன்று

தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கிய நடிகர் ரகுவரனின் நினைவு நாள். வில்லன் நடிகர்களில் வித்தியாசமான நடிப்பு, கவர்ச்சியான வில்லன் எனப்பெயரெடுத்தவர் ரகுவரன்.
தமிழ் திரையுலகில் பல ஜாம்பவான்கள் வில்லன்களாக நடித்திருந்தாலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரகுவரன் எப்போதும் நினைவுக்கூறப்படுகிறார்.
ஏழாவது மனிதன் படத்தில் ஹீரோவாக அறிமுகமான 6.3” அடி உயர இளைஞன் பின் நாளில் மிகப்புகழ்ப்பெற்றார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தினார்.
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் நாகார்ஜுனன் ஹீரோவாக நடித்த உதயம் என்கிற படத்தில் ரகுவரன் அமர்களப்படுத்தியிருப்பார்.
பாட்சா படத்தில் ஆண்டனி, விஜய் ஆண்டனின்னு அவர் பேசும் வசனம் பிரபலம்.
முதல்வன் படத்தில் அரசியல்வாதியாக வந்து அவர் பேசும் வசனம் பெரிதும் வரவேற்கப்பட்டது.
இயக்குநர் விசு இயக்கத்தில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுக்குவு ஈடு கொடுத்து நடித்திருப்பார் ரகுவரன்.
வில்லன் நடிகர்களில் அழகானவர், கவர்ச்சியானவர், அழகான உடையலங்காரத்துடன் நடித்து புகழ் பெற்றவர் ரகுவரன்.
ஒரு காலத்தில் தீவிர வில்லனாக நடித்து மிரட்டிய ரகுவரன் கடைசியாக தனுஷின் தந்தையாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார்.
ரகுவரன் மனைவி நடிகை ரோகினி. ஒரு மகன் உண்டு. கடைசி காலத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தார்.
ரகுவரன் இறுதிகாலம் சோகத்தில் முடிந்தது. 50 வயதில் மறைந்த ரகுவரன் என்றென்றும் ரசிகர்களால் நினைவுக்கூறப்படுகிறார்.