Tap to Read ➤

தொடர் தோல்வி..விஜயகாந்துக்கு திருப்புமுனை ஏற்படுத்திய ’சாட்சி’ படம்

எஸ்.ஏ.சி விஜயகாந்தின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட சாட்சி என்கிற படத்தை எடுத்தார் அதன் பின்னர் ஆரம்பித்த விஜயகாந்தின் இரண்டாவது இன்னிங்கஸ் நாட் அவுட் தான்.
Filmibeat Tamil
தமிழ் திரையுலகில் 80 களின் இறுதியில் எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றப்பின் ஒதுங்கினார். சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், முத்துராமன் போன்றோர் மத்தியில் இளம் தலைமுறை நடிகர்களின் தேவை ஏற்பட்டது.Start typing...
அப்போது கமல்ஹாசன் ஹீரோவானார், ரஜினிகாந்தும் அறிமுகமாகி மக்களை கவர்ந்தார். அந்த நேரத்தில் ஒரு கரும்புயலாக நுழைந்தார் மதுரை மண்ணின் மைந்தன் விஜயகாந்த்.
தமிழ் மண்ணின் மைந்தன் என்கிற தகுதியுடன் 1979 ஆம் ஆண்டு விஜயராஜ் என்கிற அந்த இளைஞர் விஜயகாந்தாக அறிமுகமானார்.
நடிகர் ரஜினிகாந்த சாயலுடன் ஆனால் கம்பீரமான கருத்த முரட்டு உருவத்துடன் இருந்த விஜயகாந்த் முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோவானார்.
அப்போது தனது படத்திற்கு கதாநாயகனை தேடிக்கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி. படத்தின் பெயர் சட்டம் ஒரு இருட்டறை'. சாமர்த்தியமான இளைஞன் தன் குடும்பத்திற்கு தீங்கிழைத்தவர்களை பழி வாங்குவதுதான் கதை.
எஸ்.ஏ.சி விஜய்காந்த் கூட்டணியில் 1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை சக்கைப்போடு போட்டது. ரஜினி, கமலுக்கு மாற்று நாயகனாக பல படங்களில் கமிட் ஆனார் விஜயகாந்த்.
அடுத்து சில ஆண்டுகளில் விஜயகாந்த்தின் பல படங்கள் தோல்வியை தழுவின. ஃபீல்டை விட்டு விஜயகாந்த் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அப்போது அவரை பிரபல நடிகர் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். விஜயகாந்த் அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் எஸ்.ஏ.சி மீண்டும் இணைந்தார் விஜயகாந்த். விஜய்காந்த் -எஸ்.ஏ.சி கூட்டணியில் மீண்டும் ஒரு படம் 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி சாட்சி படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
சாட்சி படத்திற்கு பின் விஜயகாந்த் தொடங்கிய செகண்ட் இன்னிங்க்ஸ் இன்றைய நாளில் (செப்.16) தான் ஆரம்பமானது. அதன் பின்னர் அவர் அவுட் ஆகவே இல்லை. பல செஞ்சுரிகள், டபுள் செஞ்சுரிகள் அடித்து கேப்டனாகவே மாறினார்.
இதே நாளில் வெளியான சாட்சி திரைப்படம் நன்றாக ஓடியது. விஜயகாந்த் எங்களுக்கு எப்போதும் ஹீரோதான் என தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். சாட்சி படத்துக்கு பின்னர் விஜயகாந்த வாழ்க்கை ஏறுமுகம் தான்.
1984 ஆம் ஆண்டு விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் அவரது 17 படங்கள் வெளிவந்தன. அதில் வைதேகி காத்திருந்தால் முற்றிலும் புதிய விஜயகாந்தை அடையாளம் காட்டியது.
நாளை உனது நாள், நூறாவது நாள், தீர்ப்பு என் கையில், ஜனவரி 1, வீட்டுக்கொரு கண்ணகி என பல படங்கள் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த்.
86 ஆம் ஆண்டில் ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே. 87 ஆம் ஆண்டு கூலிக்காரன் என சாதனைப்படைத்தார்.
திரைப்படத்துறையில் வெற்றி, கட்சி அரசியல், எதிர்க்கட்சித்தலைவர் என விஜயகாந்தின் அடுத்தடுத்த வெற்றிப்பயணங்களுக்கு முன்னுரை எழுதியப்படம் சாட்சி இதே நாளில் வெளியானது.
எஸ்.ஏ.சி தனக்கு செய்ததற்கு நன்றிக்கடனாக நடிகர் விஜய்யின் அறிமுக காலத்தில் மிகப்பெரிய கதாநாயகனான விஜயகாந்த் கௌரவம் பார்க்காமல் செந்தூரப்பாண்டி என்கிற படத்தில் நடித்துக்கொடுத்தார்.
அவரால் ஏற்றம் பெற்ற பலர் உண்டு. நடிகர் சரத்குமார், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்காக ஊமைவிழிகள், பல கலைஞர்களுக்கு திரையுலக பாதை அமைத்துக்கொடுத்தார்.
அருண்பாண்டியன், மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தினார். உதவி என்றால் மறுபெயர் விஜயகாந்த் என சினிமா வட்டாரத்தில் பெயர் உண்டு, அது சாதாரணமாக வந்ததில்லை.