Tap to Read ➤

20 ஆண்டுகளில் அசுர(ன்) வளர்ச்சி கண்ட தனுஷ்...

பார்த்தவுடன் பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் என வசனம் பேசி சிறப்பான படைப்புகளில் நடித்து தமிழக ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர் தனுஷ்
Filmibeat Tamil
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமையில் அறிமுகமாகி 20 ஆண்டுகளில் அசுர வளர்ச்சிக்கண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.
திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் நடித்தபோது கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டவர் தனுஷ். ஆனால் தான் சுள்ளான் அல்ல சூப்பர் என பின் நாளில் நிரூபித்தார்.
பின்னர் வெளியான 2004 ஆம் ஆண்டு தேவதையைக் கண்டேன் படம் தனுஷின் நடிப்பில் மெருகேறியதை காண்பித்தது.
அதே 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார். இதன் மூலம் தனுஷின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகள் ஏற்பட்டது.
2005 ஆம் ஆண்டு தேவதையைக்கண்டேனில் டீ விற்கும் இளைஞனாக நடித்த தனுஷ் 2006 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையில் முக்கிய படம் ஒன்றில் நடித்தார்.
தனுஷை அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவன் தனுஷின் வாழ்க்கையை திருப்பும் விதமாக ’புதுப்பேட்டை’ என்கிற படத்தில் நடிக்க வைத்தார்.
புதுப்பேட்டை படம் தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என நிரூபித்தது. கொக்கி குமாராக இயல்பாக நடித்தார் தனுஷ்.
அடுத்த ஆண்டே வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் அவரது நடிப்பை மேலும் மெருகேற்றி பெயர் வாங்கித்தந்தது.
2008 ஆம் ஆண்டு நயன் தாராவுடன் இணைந்து நடித்த யாரடி நீ மோகினி படமும் பேசப்பட்டது. இது ரகுவரன் நடித்த கடைசிப்படம் ஆகும்
தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் வெற்றிமாறனின் அடுத்த கூட்டணியில் 2011 ஆம் ஆண்டு நடித்த ஆடுகளம் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. தனுஷுக்கு சிறந்த தேசியவிருதும் கிடைத்தது.
தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்தார். 2014 ஆம் ஆண்டில் வேலயில்லா பட்டதாரி படத்தை தயாரித்து நடித்தார். படம் சிறப்பாக ஓடியது. இதில் வரும் அம்மா, அம்மா பாடல் மிகப்பிரபலம்.
தொடர்ந்து ஷமிதாப் என்கிற இந்திப்படத்தை தயாரித்தார். இதில் அமிதாப், அக்‌ஷராவுடன் தனுஷும் நடித்தார்.
அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து காக்கிச் சட்டைப்படத்தை தயாரித்தார். அதே ஆண்டில் மாரி, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களையும் தயாரித்தார்.
இதில் காக்கா முட்டை படம் தேசிய விருதைப்பெற்றுத் தந்தது. மாரி தனுஷுக்கு வெற்றிப்படம் ஆகும். அடுத்து பவர் பாண்டி படத்தை தானே எழுதி இயக்கி நடித்தார்.
தனுஷ் தயாரித்த படத்தில் முக்கியமான படம் ’காலா’. இந்தப்படத்தை பா.ரஞ்சித் இயக்க ரஜினிகாந்த், நானாபடேகர், சமுத்ரகனி உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்திருக்கும்.
தனுஷ் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை எனத்தாண்டி பாடகருமாவார். அவரது பல படங்களில் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
தனுஷ் நடிப்பை வெளிக்கொணர்ந்த இயக்குநர்கள் என்றால் செல்வராகவன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோரைச் சொல்லலாம்.
வெற்றிமாறனின் அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு மீண்டும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அடுத்து வடச்சென்னை படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். அது தனுஷுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் தனுஷை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. சிறந்த நடிகர்கள் இடத்துக்கு தனுஷை நகர்த்திய படத்தில் கர்ணனுக்கும் இடம் உண்டு.
தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி திடீரென பிரிந்தது. 18 ஆண்டு மண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக இருவரும் அறிவித்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.