Tap to Read ➤

சூர்யா கடந்து வந்த 25 ஆண்டுகள்..திரும்பி பார்ப்போமா?

நடிகர் சூர்யா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. சாக்லெட் பாய் ரோலக்சாக மாறியது, ஆஸ்கர் அவார்டு குழுவுக்கு அழைக்கப்பட்டதும், தேசிய விருது பெற்றதும் என 25 வது ஆண்டில் பல நல்ல விஷயங்கள் அவருக்கு நடந்துள்ளது.
Sidhanathan K
அமைதியான சுபாவம், ஒதுங்கி வளர்ந்த சூர்யா என்ன செய்யப் போகிறாரோ என்ற கவலையில் இருந்தேன், இன்று சாதித்துக் காட்டியுள்ளார்" தந்தை சிவக்குமார் மனம் நெகிழ்ந்து சொன்னது.
நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் ஆகி 25 ஆண்டு காலத்தில் சூர்யா அடைந்த அசுர வளர்ச்சி அவருடைய கடின உழைப்பை காட்டுகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது.
இயக்குநர் வசந்த் ’ஆசை’ திரைப்படத்தில் நடிக்க சூர்யாவை அழைத்த போது, மறுத்துவிட்டார். இதனால் சூர்யா மறுத்த வாய்ப்பு நடிகர் அஜித்துக்கு கிடைத்தது.
அடுத்து வசந்த இயக்கிய நேருக்கு நேர் படத்தில் விஜய், அஜித் இருவரையும் நடிக்க வைத்தார். திடீரென அஜித் விலக சூர்யாவை நடிக்க வைத்தார். இப்படித்தான் திரைத்துறையில் சூர்யா காலடி எடுத்து வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மேடையில் பேசும்பொழுது, நான் சூர்யாவின் முதல் படமான நேருக்குநேரை பார்த்தேன் அதில் அவருக்கு டான்ஸ் வரவில்லை, பாடி லாங்குவேஜ் சரியில்லை என்று தெரிவித்திருந்தார்.
2001 ஆம் ஆண்டு சூர்யாவின் வாழ்க்கையை திருப்பி போட்டவர் இயக்குனர் பாலா. நந்தா படத்தில் சூர்யா தன்னுடைய வழக்கமான நடிப்பை விட்டு முற்றிலும் மாறி ஒரு முரட்டுத்தனமான இளைஞனாக நடித்திருந்தார்.
மௌனம் பேசியதே படத்தில் மீண்டும் ஒரு முரட்டுத்தனமான ஒரு வித்தியாசமான இளைஞராக சூர்யா நடித்தார். இந்த படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது.
அடுத்து மிகப்பெரிய திருப்புமுனை படம் கௌதம் வாசுதேவ மேனனின் காக்க காக்க படம். சூர்யா, ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பெயர் வாங்கினார்.
"சூர்யாவின் காக்க காக்க படத்தை மாறு வேஷத்தில் சென்று பார்த்தேன், அவருடைய நடிப்பு பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது" என ரஜினிகாந்த் பாராட்டினார்.
சூர்யாவின் திரைப்பயணத்த்தில் திருப்புமுனை படம் பாலா இயக்கத்தில் வந்த பிதாமகன். விக்ரமிற்கு இணையாக நடித்து பெயர் வாங்கினார் சூர்யா.
2004 ஆம் ஆண்டு பேரழகன், மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து, 2005-ல் மாயாவி என அனைத்தும் அவருக்கு பெயர் வாங்கித்தந்த படங்கள்.
2005 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸின் பான் இந்தியா படமான கஜினியில் சூர்யா நடித்தார். அஜித் நடிக்க மறுத்த படம் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பால் வெற்றி படமாக அமைந்தது.
2010 ஆம் ஆண்டு சூர்யாவுக்கு மிக முக்கியமான ஆண்டு எனலாம் இயக்குனர் ஹரி விக்ரமுக்காக கதை எழுதிய 'சிங்கம்' படத்தில் சூர்யா நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது.
இதன் வெற்றியால் அடுத்தடுத்த சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த படங்கள் தெலுங்கு பட ரசிகர்கள் மத்தியில் சூர்யாவை கொண்டுச் சேர்த்தது.
கொரோனா காலகட்டத்தில் சூரரை போற்று படம் வெளியானது. திரையரங்கில் வெளியிட முடியாத நிலையில் ஓடிடியில் படத்தை வெளியிட்டார்.
சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் படம் என்றால் ஜெய் பீம் படத்தை சொல்லலாம். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம், சில எதிர்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நீதியை சமூக அக்கறையுள்ள ஒரு வழக்கறிஞர் வாதாடி சட்டத்தின் மூலம் நியாயத்தை பெற்றுத்தரும் படம் என்பதால் சிறப்பாக பேசப்பட்டது.
ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, ஆஸ்கருக்கு சென்றது சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், ஆஸ்கர் அவார்டு குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸாக தோன்றியது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.
68 வது தேசிய திரைப்பட விருது சூரரைப்போற்று படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை, சிறந்த படம் என 5 விருதுகளை மொத்தமாக இப்படம் அள்ளியுள்ளது.