Tap to Read ➤

ஓடிடியில் வெளியானது 83 மூவி

நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வெளியானதால் ‘83’ மூவி நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டாரில் நேற்றிரவு வெளியானது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத சாதனை படைத்த ஆண்டு 1983, முதல் உலககோப்பையை இந்தியா கைப்பற்றியது.
இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘83’. மிக அற்புதமாக உலககோப்பை நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து காட்டியுள்ளனர்.
இந்தப்படத்துக்காக கிரிக்கெட் வீரர்களின் தோற்றத்தை ஒத்துள்ள நடிகர்களை தேர்வு செய்து பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தது சிறப்புStart typing...
படத்தின் தயாரிப்பாளர் கபீர் கான் எவ்வித சமரசமும் செய்யாமல் படத்தை தயாரித்துள்ளார். ரன்வீர் சிங் கதையின் நாயகன் கபில்தேவ் வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தில் இணைந்துள்ளது. கமல் நடித்த ஏக்துஜே கேலியே படப்பாடலை 83 உலககோப்பை நேரத்தில் தாங்கள் ரசித்ததாக ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்..
டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் வழக்கு இருந்ததால் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் ரசிகர்கள் ஏமாற்றம்டைந்திருந்த நிலையில் சாதகமாக தீர்ப்பு வெளியாகிய நிலையில் நேற்றிரவு ஓடிடியில் ‘83’ படம் வெளியானது.
இந்தப்படத்தில் தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இதற்காக அவர் ஸ்ரீகாந்திடம் பயிற்சி எடுத்து நடித்தார். சில நேரம் நீயா இரு மேன் என ஸ்ரீகாந்த் ஜீவாவிடம் சொல்லியாதாக ஜீவா குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் நடித்த மற்ற வீரர்களும் முக்கியமானவர்களே, இந்திய வீரர் சந்தீப பட்டேலின் மகனே தந்தை வேடத்தில் நடித்தார். மேற்கு இந்திய வீரர்களாக நடித்தவர்கள் பெரும்பாலோர் முன்னாள் வீரர்களின் மகன்கள்.