Tap to Read ➤

கபில்தேவின் ஆளுமையைச் சொல்லும் ’83’ மூவி

கபில்தேவின் ஆளுமையைச் சொல்லும் ’83’ மூவி
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவரது அணி உலக கோப்பையை வெல்ல எடுத்துக்கொண்ட முயற்சிகளை பெருமையாக சொல்கிறது 83 மூவி
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல இந்திய வீரர்கள் பட்ட அவமானங்கள், துயரங்களை பதிவு செய்கிறது ’83’ மூவி
அனுபவம் இல்லாத இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் அணியாக மாறுவதை அழகாக சித்தரித்துள்ளனர்.
உலகக்கோப்பையை எப்படியும் வெல்லப்போவதில்லை, அதை சாக்காக வைத்து அமெரிக்க டூர் போகும் லட்சியத்தில் சென்றுள்ளனர் இந்திய வீரர்கள்.
ஆனால் கபில்தேவ் மட்டுமே கோப்பையை வெல்லும் உறுதியில் இருந்துள்ளார். அதற்காக அவர் கேலி செய்யப்பட்டதும் நடந்தது. அதை பிரஸ் மீட்டில் சொல்லி அவமானப்படுவார்.
ஒரு காட்சியில் மேற்கிந்திய தீவு அணி இதேபோல் அவமானப்பட்டபோது இரண்டு உலகக்கோப்பையை வென்று பதிலளித்தார்கள் எனச் சொல்வார் கபில்.
காயம்பட்ட வீரர்கள், பலம் வாய்ந்த அணிகள் என அனைத்தையும் கடந்து இறுதிச் சுற்றில் இந்தியா நுழையும்போது இந்தியாவே பாராட்டும்.
கபில் கோப்பையை வெல்வோம் என்று சொன்னபோது நாங்கள் பைத்தியக்கார கேப்டன் என நினைத்தோம் ஆனால் அவர்தான் உண்மையான கேப்டன் என ஸ்ரீகாந்த் மனம் நெகிழ்ந்து பாராட்டுவார்.
இறுதிப்போட்டியில் 183 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து துவண்டு நிற்கும்போது அந்த இலக்கை அடைய அவர்களை விடவே கூடாது என்பார் கபில்.
கபில் தேவின் உறுதியான திடமான தலைமை கோபையை வென்று தந்தது. 39 ஆண்டுகள் போனாலும் அந்த நாள் மறவாமல் அனைவர் மனதிலும் உள்ளது.
கபில் தேவின் தனித்திறமையும் அணியை வழி நடத்தியதும், தனித்துவமான தைரியமும் வெற்றிக்கு காரணம் என அழுத்தமாக பதியவைத்துள்ளார்கள். தற்போது இந்தப்படம் ஓடிடியில் ஹாட்ஸ்டார், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் உள்ளது.