Tap to Read ➤

கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று

Today is the 83 rd birthday of Lollu Saba's pioneer Gavundamani
தமிழ் சினிமாவில் நீண்டகாலம் போராடி பின்னர் 1980 களில் நல்ல வேடங்களில் கால்பதித்து முன்னேறி உச்சம் தொட்டவர் கவுண்டமணி.
திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ளவர். தன்னுடைய 25 வது வயதில் திரையுலக பயணத்தை தொடங்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணம் செய்தவர்.
நாடகங்களில் சுட்டிக்காட்டி எதிர் மறை வசனங்கள் பேசியதால் (counterpoint) கவுன்டர் மணி என (counter Mani) அழைக்கப்பட்டவர் பின்னர் கவுண்டமணி ஆனார்.
லொல்லு சபா கான்செப்ட்டை திரையுலகில் சந்தானம் பிறப்பதற்கு முன்னரே தனது சேட்டைகள், எதிர்மறை வசனங்கள் மூலம் செயல்படுத்தி புகழ்பெற்றவர் கவுண்டமணி.
சினிமாவில் நக்கல் நையாண்டி, கதாநாயகனையே கலாய்ப்பவர்கள் என திரையுலகில் எம்.ஆர்.ராதாவை சொல்வார்கள். அவர் வழியில் திரையில் சொன்னவர் கவுண்டமணி.
சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், ராமன் எத்தனை ராமனடி போன்ற படங்களில் சிறிய வேடங்களே கிடைத்து வந்தது. நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, சோ போன்றவர்கள் கோலோச்சிய காலம் அது.
16 வயதினிலே இளம் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் புதுமுக நடிகர் ரஜினியின் அடியாளாக பரட்ட பத்த வச்சிட்டியே பரட்ட என இவர் சொல்லும் வசனம் மூலம் கவுண்டமணி வெளியே தெரிய ஆரம்பித்தார்.
1980 களில் கவுண்டமணியுடன் செந்திலும் சேரவே டாம் அண்ட் ஜெர்ரி பாணியில் லாரல் ஹார்டி போல் இரட்டையர்களாக காமெடியில் கலக்க ஆரம்பித்தனர்.
கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலும், ராமராஜன் படங்களிலும் இந்த இரட்டையர் ஜோடி அட்டகாசம் காரணமாக பல படங்கள் ஓடியது.
நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ஸ்டார்ட் மியூசிக் போன்ற வசனங்களால் பிரபலமானார்.
உதயகீதம், இதயக்கோயில், நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தால் போன்ற படங்களில் கவுண்டமணி அடித்த லூட்டி செம்மையாக ரசிக்கப்பட்டவை.
அந்த காலத்தில் ரெக்கார்டுகளிலும், கேசட்டுகளிலும் கவுண்டமணி செந்திலின் காமெடிகள் வசனங்கள் ஊர்தோறும் ஒலிக்கும்.
விவேக், வடிவேலு காலத்துக்கு முன்னர் கவுண்டமணியின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறந்தத்து.
கரகாட்டக்காரனின் ரெண்டு பழம் ஒர்ருவா காமெடியும் அதை திரும்ப திரும்ப கேட்டு அடிப்பதும், காரை தள்ளிக்கொண்டு வரும்போது செந்தில் கேட்ட கேள்வியால் கோபமடைந்து திட்டுவதும் மாஸ் சீன்கள்
செந்திலிடம் உனக்கு கிடைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவைதானா, சினிமாக்காரனுங்கதான் விளம்பரத்துக்கு அலையறானுங்க என சினிமா ஹீரோக்களையே விலாசும் தைரியம்
கவுண்டமணி சத்யராஜ் காமெடி மிகவும் வரவேற்கப்பட்ட காமெடி ஆகும். ஒருத்தருக்கொருத்தர் நக்கல் நய்யாண்டியால் சிரித்து பல டேக் வாங்கும் நிலை ஏற்படுமாம்.
ஷங்கரின் முதல் படம் ஜென்டில் மேனில் அர்ஜுனுடன் சேர்ந்து அவர் கொள்ளையடிக்கும் காட்சிகள், டிக்கிலோனா காமெடி என கலைக்கட்டும்.
டாட்டா பிர்லா படத்தில் ஆர்.பார்த்திபனுக்கு இணையாக கவுண்டருக்கு கவுண்டர் கொடுத்து திருடனாக நடித்திருக்கும் காட்சிகளும் அருமையாக இருக்கும்.
கவுண்டமணி படங்களில் எல்லாம் உருவக்கேலி, அதிக அளவில் மட்டம் தட்டுவது, ஊனத்தை குறை சொல்வது அதிகம் இருந்தது என்கிற விமர்சனம் உண்டு.
.ஒரு காலத்தில் 2வது ஹீரோ போல் இருந்த கவுண்டமணியை மன்னன் படத்தில் நடிக்க கேட்டபோது ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்டதாக சொல்வார்கள்.
கடைசியாக கதாநாயகனாக 49 ஓ படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நடித்தார். வயோதிகம் காரணமாக படத்தில் நடிப்பதில்லை.
ஆனாலும் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார்.
ஆயிரம் நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் மீம் நாயகனாக கவுண்டமணி என்றும் பேசப்படுவார்.