Tap to Read ➤

90K கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ.. பவர் ரேஞ்சர்ஸ் ஜேசன் தற்கொலை

90 களில் பிறந்தவர்களின் மனம் கவர்ந்த பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் தனது 49 வது வயதில் தற்கொலை செய்துக்கொண்டார்
Filmibeat Tamil
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் 90 களில் ஒரு புரட்சி ஏற்பட்டது. கேபிள் மூலம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கும் முறை உலகெங்கும் பரவியது
வெளிநாட்டு தொலைக்காட்சித்தொடர்கள் இந்தியாவிலும் ஒளிபரப்பானது. இதனால் 90, 2000 ஆண்டுகளில் பிறந்தவர்கள் பல சுவாரஸ்யமான தொடர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
இந்தியில் சக்திமான், சிஐடி, மஹாபாரத் போன்ற தொடர்கள் பிரபலமானது. அதேபோல் பவர் ரேஞ்சர்ஸ் எனும் தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. நாச சக்திகளை பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் முறியடிப்பார்கள்
இந்த குழுவில் உடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டார்கள். ரெட் ரேஞ்சர், வைட் ரேஞ்சர், கிரீன் ரேஞ்சர், பிளாக் ரேஞ்சர் என அழைக்கப்பட்டனர்.
பவர் ரேஞ்சர்கள் செய்யும் ஸ்டண்டுகள் அதிரடியாக இருந்ததால் குழந்தைகளை கவர்ந்தது. இதற்காக மார்ஷியல் ஆர்டிஸ்டுகளை தேர்வு செய்து நடிக்க வைத்தனர். ஆயுதங்களும் வித்தியாசமாக இருக்கும்
குழந்தைகளை எந்நேரமும் கட்டிப்போட்ட பவர் ரேஞ்சர்ஸ் உலகெங்கிலும் குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக இருந்தனர், அப்படிப்பட்ட மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக இருந்தவர் ஜேசன் டேவிட் ஃபிராங்க். புகழ்பெற்ற நடிகர், மார்ஷியல் ஆர்டிஸ்ட்
அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் ஜேசன் பிராங். இவர் 90 களில் புகழ்பெற்ற கிரீன் ரேஞ்சர் டாமி ஆலிவர் பாத்திரத்தில் நடித்தார். மொத்தம் 14 எபிசோடுகளாக இது வந்தது. JDF என கிரீன் ரேஞ்சராக புகழ்பெற்றார்
வெள்ளை ரேஞ்சராகவும், பவர் ரேஞ்சர்ஸ் அணியின் புதிய தலைவராக வைத்து தொடர் வெளியானது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஜேசன் பிராங் பிரபலமானார்
ஜேசன் நடிகர் மட்டுமல்ல புகழ்பெற்ற மார்ஷியல் ஆர்டிஸ்டாவும் இருந்தார். தற்காப்பு கலையில் பல விருதுகளை பெற்றவர் ஜேசன்.
புகழின் உச்சியில் இருந்தபோது 1994 ஆம் ஆண்டு ஷவ்னா என்பவரை மணந்தார். 2001 ஆம் ஆண்டு விவகாரத்தான நிலையில் மீண்டும் 2003 ஆம் ஆண்டு டாமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்
இந்நிலையில் பிராங்க் தனக்கு துரோகம் செய்ததாக கூறி இந்த ஆண்டு செப்டம்பரில் விவாகரத்து செய்தார் டாமி. அதுமுதல் சோகத்தில் இருந்த ஜேசன் பிராங் தனது திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்
இந்நிலையில் நவ.19 அன்று திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சூப்பர் ஹீரோ ஜேசனின் துரதிர்ஸ்டவசமான சோக முடிவு உலகம் முழுவதிலும் பலரையும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது
ஜேசன் பவர் ரேஞ்சர் நிகழ்ச்சியில் மூன்று சீசன்களில் நடித்தார், மொத்தம் 123 எபிசோடுகள் என பல ’பவர் ரேஞ்சர்ஸ்’ திரைப்படங்களில் நடித்தார். 49 வயதில் சோக முடிவை அவர் தேடிக்கொண்டுள்ளார்