Tap to Read ➤

ராஜூமுருகன் - கார்த்தி இணையும் படத்திற்கு 'ஜப்பான்' என தலைப்பு

ஜோக்கர் திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய முன்னணி நடிகராக பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார், கார்த்தி.
கார்த்தியின் நடிப்பில் ஆகஸ்ட் 12ல் விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விருமன் படத்தினை தொடர்ந்து சர்தார், பொன்னியின் செல்வன் என கார்த்தியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது
சமீபத்தில் விருமன் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கார்த்தியின் அடுத்த படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் ராஜு முருகன் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி தான் கதாநாயகன் என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார், ராஜு முருகன்.
இயக்குனர் ராஜு முருகன் குக்கூ, ஜோக்கர் போன்ற ஜனரஞ்சகமான படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர்.
இயக்குனர் ராஜு முருகன் - கார்த்தி இணையும் படத்தின் தலைப்பு 'ஜப்பான்' என சில தகவல்கள் வெளியாகியுள்ளன, அதிகாரப்பூர்வமாக இன்னும் இப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
கார்த்தியின் விருமன் திரைப்படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள்
விருமன் தகவல்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up