Tap to Read ➤

விஜய்யுடன் தளபதி 66-ல் இணையும் நடிகர் ஷாம்

தமிழ் திரையுலகின் ஸ்மார்ட்டான ஹீரோக்களில் ஒருவரான ஷாம் தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். தளதி 66-ல் விஜய்யுடன் இணைகிறார்.
Filmibeat Tamil
விஜய்யுடன் தளபதி 66-ல் இணையும் நடிகர் ஷாம்
தமிழ் திரையுலகில் 2000 ஆண்டுகளில் அறிமுகமான அழகான நடிகர்களில் ஷாம் ஒருவர்.
குஷி படத்தில் விஜய்யின் நண்பனாக ஷாம் அறிமுகமானார். அழகான அந்த இளைஞர் யார் என பட உலகம் திரும்பிப்பார்த்தது.
அதன் பின்னர் லேசா லேசா படத்திலும், 12 பி படத்திலும் கதாநாயகனாக நடித்தார். நடிகை திரிஷாவும் இந்தப்படத்தில் தான் அறிமுகமானார்
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, பாலா, அன்பே அன்பே, கிரிவலம், உள்ளம் கேட்குமே, ABCD, மனதோடு மழைக்காலம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
இயற்கை என்கிற படத்தில் கதாநாயகனாக குரும்புக்கார இளைஞனாக நடித்தார். இந்த படம் ஷாமுக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. தேசிய விருதையும் பெற்றது.
 அழகான திறமையான நடிகராக, நன்றாக நடிக்கக்கூடிய நடிகராக இருந்தும் ஏனோ ஷாமுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. அப்படியே வந்தாலும் அவைகள் பெரிதாக ஓடவில்லை.
6 மெழுகுவர்த்திகள் என்கிற படத்தில் மகனை பறிகொடுத்த தந்தையாக தேடி அலையும் கேரக்டரில் அசத்தியிருப்பார். ராம் தயாரித்த இப்படமும் வணிக ரீதியாக வெற்றிப்பெறவில்லை.
அதன் பின்னர் தில்லாலங்க்டி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தார். போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு.
இந்நிலையில் வேறு படம் எடுக்கும் முயற்சியில் இருந்த ஷாமுக்கு தேடிவந்தது நல்ல வாய்ப்பு. விஜய்யின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தாம் ரியல் ஹீரோ என்பதை நிரூபிக்கும் வகையில் உடலை பயிற்சி செய்து கட்டுகோப்பாக வைத்துள்ளார் ஷாம்.
ஷாமுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர் இனி தன் பயணத்தை தடியின்றி தொடர வாய்ப்புள்ளது.