Tap to Read ➤

பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்

கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை பின்னுக்கு தள்ளி, பீஸ்ட் திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் திரைப்பட குழுவினருக்கு விருந்து வைத்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் ஏப். 13 அன்று வெளியானது.
மாஸ்டர் படத்திற்கு பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பீஸ்ட். டாக்டர் படத்தில் வெற்றிகரமாக இயக்கிய இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கினார்.
நெல்சன் திலிப் குமார் விஜய்யின் ரசிகரும் கூட. இந்தப்படம் புக் ஆன சில நாட்களிலேயே நெல்சனுக்கு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பீஸ்ட் படம் கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் வருவதால் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. அனிருத் இசைமைக்கிறார் என்பதாலும் அதற்கு ஏற்றாற்போல் அரபிக்குத்து பாடலும் வெளியானது.
அரபிக்குத்து பாடல் சினிமாவைத்தாண்டி பிரபலங்களாலும் ரசிக்கப்பட்டது. பலரும் ஆடிப்பாடினர். அரபிக்குத்து பாடல் இதுவரை 340 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அரபிக்குத்து பாடலுக்குப்பின் ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. இதுவும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இரண்டு பாடல்களிலும் விஜய், பூஜா ஹெக்டே இருவரும் நடனத்தில் கலக்கியிருப்பார்கள்.
பாடல்கள் வெளியான பின்னர் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர், ஆனால் ஆடியோ ரிலீஸ் இல்லை என அறிவித்து டிரைலரை வெளியிட்டனர்.
ட்ரைலரில் ஒரு ஷாப்பிங் மாலில் அடைக்கப்பட்ட பொதுமக்களை காப்பாற்ற தீவிரவாதிகளுடன் சண்டையிடுவதும், விமானத்தில் பறக்கும் காட்சிகளும் இருந்தது.
இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமானது. ஏப்.13 பீஸ்ட் வெளியான மறுநாள் கேஜிஎஃப் 2 வெளியானது. பீஸ்ட் படத்தின் வலுவில்லாத கதைக்களம் காரணமாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
கேஜிஎஃப்-2 பெருவெற்றி பெற்றது, பீஸ்ட் எதிர்ப்பார்த்த அளவு லாபம் இல்லை என்றாலும் வசூல் சாதனையில் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஆயிரம் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதுகுறித்து கவலைப்படாமல் தனது பீஸ் படக்குழுவினருக்கு விஜய் விருந்து வைத்துள்ளார்.
விஜய் வைத்துள்ள விருந்துக்கு நெல்சன் மனம் நெகிழ்ந்து நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பூஜா ஹெக்டேவும் ரீட்வீட் செய்து வாழ்த்தியுள்ளார்.