Tap to Read ➤

பந்தயக்குதிரை விஜய் வீணடிக்கப்பட்டாரா?

மிகப்பெரிய மாஸ் நடிகரான விஜய்க்கு ஏற்ற திரைக்கதை தீனி போடாமல் வலுவான வில்லன் பாத்திரம் இல்லாமல் வலுவிழந்த கதைக்களம் காரணமாக பீஸ்ட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தின் உச்ச நடிகர் நடித்த ஒருபடம் முதல் நாளே ரசிகர்களாலேயே சரியில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால் திரைக்கதை, காட்சி அமைப்பில் காட்டிய அலட்சியமே காரணம் என்கிற கருத்து எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தப்படம் பீஸ்ட். அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல் எல்லாம் பெரிய அளவில் சாதனைப்படைத்தது. ஆனால் படம் சோதனையைத் தந்துவிட்டது.
நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்தப்படியாக பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர். மாஸ்டர் திரைப்படம் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்ததால் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதன் பின்னர் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளி வந்தது. குறுகிய கால இடைவெளியில் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் பெயர் அறிவிக்கப்பட்டது.
படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்பதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியது. ஏற்கெனவே அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் பெருமளவில் ஹிட் அடித்ததால் இந்த டீம் பெரிய அளவில் சாதிக்கும் என ரசிகர்கள் கொண்டாடினர்.
அரபிக்குத்து பாடலை தயாரிப்பது குறித்த சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் திலீப்குமார் கூட்டணியின் அலம்பல் அவர்களை விஜய் கலாய்ப்பது பெரிதும் வைரலானது.
அரபிக்குத்து பாடல் வெளியானபோது இதுவரை இல்லாத அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, இதனால் பீஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியது.
அடுத்து வந்த ஜாலியோ ஜிம்கானா எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இதனால பீஸ்ட் வரலாறு காணாத வெற்றியடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆடியோ லாஞ்ச் இல்லை என டிரைலர் வெளியானது. ட்ரைலரில் ஒரு ஷாப்பிங் மாலில் மக்களை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளுடன் விஜய் மோதுவதும், விமானத்தில் பறந்து சண்டைப்போடுவதும் என இருந்த காட்சிகளை வைத்து அவரவருக்கு தோன்றியதை கூறினர்.
விஜய் விமானம் ஓட்டுவதையும், ஆக்சிஜன் மாஸ்க் இல்லாமல் ஃபைட்டர் ஜெட் ஓட்டுவதையும் விமர்சித்தனர். ஆனால் இதற்கெல்லாம் அசருவார்களா ரசிகர்கள் அவர்களும் பதிலடி கொடுத்தனர்.
வலிமையில் அஜித் பில்டிங் விட்டு பில்டிங் தாவுவதை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். ஆனால் பீஸ்ட்டில் லீ கூப்பர் கார் பில்டிங் விட்டு பில்டிங் தாவியது விமர்சனத்துக்குள்ளானது. இது ஜேம்ஸ்பாண்ட் போன்ற படம் என நெல்சன் சொன்னார்.
இடையில் கேஜிஎஃப்-2 படம் பீஸ்ட் படம் வெளியான மறுநாள் வெளியாகும் என்று அறிவிப்பால் பீஸ்ட் படத்துடன் மோதலா என யாஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விஜய் சீனியர் அவர் ரசிகர்கள் என்படத்தை ரசிப்பார்கள், என் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்ப்பார்கள் என்று யாஷ் தெரிவித்தார்.
ஏப்.13 பீஸ்ட் படம் வெளியானது படத்தில் ஹீரோ ரோல் மிகைப்படுத்தி காட்டப்பட்டதும், திரைக்கதை வலுவாக இல்லாமல் இருந்ததும் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.
குறுகிய கால இடைவெளி என்பதால் திரைக்கதையை தயார் செய்வதில் மெனக்கிடல் இல்லை. கதையில் வலு இல்லை, ஹீரோவுக்கு இணையாக வில்லன் இல்லை என்பது பெரிய மைனஸ் என்கிறார்கள்.
தீவிரவாதிகள் ஏதோ சுற்றுலா வந்தவர்கள் போல் பிணைக்கைதிகளை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதும், விஜய் அசகாய சூரத்தனம் செய்வதையும் விஜய் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ரா ஏஜெண்ட் திடீரென விமானப்படை வீரர் போல் ஜெட் விமானத்தை இயக்குவதும், பாகிஸ்தானுக்குள்ளே செல்வதும் இப்போதுள்ள விஞ்ஞான தொழில் நுட்பம் அறிந்த ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பந்தயக் குதிரையான விஜய்க்கு அவருக்கேற்ற கதைக்களம், எதிர்புறம் வில்லன் ரோலில் வலுவான பாத்திரம் என அமைக்காமல் பந்தய குதிரையை கடற்கரை மணலில் ஓடவிட்டு காசு பார்த்தது போல் அவரது மாஸை வீணடித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
விட்டதை பிடிக்க தளபதி 66 -ல் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.