Tap to Read ➤

39 வயதினிலே... இன்றும் இளைமையாக த்ரிஷா

2002 ஆம் ஆண்டு லேசா லேசா படம் மூலம் அறிமுகமான த்ரிஷா 39 வயதிலும் இளமையாக பல கனமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாள் பதிவு
Filmibeat Tamil
39 வயதினிலே... இன்றும் இளைமையாக த்ரிஷா
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷாவிற்கு இன்று 39 வது பிறந்தநாள்.
1983ம் ஆண்டு மே 4ம் தேதி சென்னையில் கிருஷ்ணன் மற்றும் உமா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் நடிகை த்ரிஷா. சர்ச் பார்க் அருகே உள்ளா சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த த்ரிஷா, எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றார்.
மாடலிங் ஆர்வம் கொண்ட இவர், 1999ம் ஆண்டு மிஸ் சென்னை, மிஸ் சேலம் உள்ளிட்ட அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டார்.
1999ம் ஆண்டு ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்த நடிகை த்ரிஷா லேசா லேசா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் படம் தாமதமாக சூர்யாவுடன் நடித்த மெளனம் பேசியதே படம் மூலம் கதாநாயகியானார்.
சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை த்ரிஷா. இன்னமும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக அசத்தி வருகிறார்.
2003ம் ஆண்டு வெளியான சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. அந்த ஆண்டில் மட்டும் மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 என பல படங்கள் த்ரிஷா நடிப்பில் வெளியாகின.
2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. முத்துப்பாண்டி பிரகாஷ் ராஜை போல ஒட்டுமொத்த தமிழ்நாடும் செல்லம் செல்லம் என த்ரிஷாவை கொஞ்சியது.
2005ம் ஆண்டு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக திருப்பாச்சி படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்டார். 2006ல் ஆதி, 2008 ஆம் ஆண்டில் குருவி என தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
சாமி மாமி, கில்லி தனலட்சுமியை மறக்கடிக்கும் விதமாக விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸி கதாபாத்திரம் த்ரிஷாவுக்கு நச்சென பொருந்தியது. அஜித்துடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் விஜய்சேதுபதி உடன் அவர் நடித்த 96 திரைப்படத்தின் ஜானு கதாபாத்திரம் இன்னமும் ரசிகர்கள் நெஞ்சில் “யமுனை ஆற்றிலே” பாடலை பாடிக் கொண்டிருக்கிறது.
நடிகை த்ரிஷா ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை தற்போது சம்பளம் வாங்குகிறார் என்றும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 8 கோடி வரை விளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம் சம்பாதிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரிய தொகை சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2002ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக சுமார் 20 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் த்ரிஷா.
த்ரிஷா நடித்த ஆக்‌ஷன் படமும் உண்டு, உலக நாயகன் கமலுடன் நடித்த தூங்காவனம் படம் இதில் போலீஸ் அதிகாரியாக வந்து கமலுடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
கமலுடன் மன்மதன் அம்பு படத்திலும் த்ரிஷா நடித்திருந்தாலும், ரஜினியுடன் அவர் நடிக்கவே இல்லை, அந்தக்கனவு சமீப ஆண்டில் ’பேட்ட’ படம் மூலம் நிறைவேறியது.
தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ’கொடி’ படத்தில் த்ரிஷா அரசியல் தலைவியாக வித்தியாசமான வேடத்தில் அசத்தியிருப்பார்.
தற்போது த்ரிஷா டான்சிங் ரோஸ் உடன் சேர்ந்து ‘தி ரோட்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அதற்கான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.