Tap to Read ➤

அந்த காலம் முதல் இந்த காலம் வரை தற்கொலை செய்துக்கொண்ட நடிகைகள்

சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே தற்கொலை செய்துக்கொண்ட நடிகைகள் அந்த காலம் முதல் இன்றுவரை இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகை ஷோபா தொடங்கி தீபா வரை பட்டியல் நீளுகிறது.
Filmibeat Tamil
பிரபல நடிகைகள் தற்கொலை செய்ததில் தமிழகத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது நடிகை ஷோபாவின் தற்கொலை. உச்ச நடிகையாக இருக்கும் போதே தற்கொலை செய்துக்கொண்டார்.
முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, பசி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷோபா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். 1980 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அடுத்து தமிழ் திரையுலகை பாதித்த பெரிய தற்கொலை பிரபல நடிகை படாபட் ஜெயலட்சுமி, காதல் தோல்வியால் 1980 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார். இவர் ரஜினியுடன் 2 படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
அடுத்த பெரிய தற்கொலை ரஜினியுடன் தர்மயுத்தம், பைரவி படத்தில் நடித்த லட்சுமிஸ்ரீ. 1980 ஆம் ஆண்டிலேயே இவரும் தற்கொலை செய்துக்கொண்டார்.
தமிழ் திரையுலகில் ஷோபா தற்கொலைக்கு பின் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய தற்கொலை நடிகை சிலுக்கு சுமிதாவின் தற்கொலை. 1996 ஆம் ஆண்டு புகழின் உச்சியில் இருக்கும்போதே திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.
அடுத்து தமிழ் திரையுலகை பாதித்த தற்கொலை கோழிக்கூவுது விஜியின் தற்கொலை. விஜயகாந்தின் சாட்சி பட நாயகி, சிம்மாசனம், விசுவின் டௌரி கல்யாணம் படங்களில் நடித்தவர். 2000 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அடுத்து தற்கொலை செய்துக்கொண்ட பிரபல கதாநாயகிகள் சிம்ரனின் தங்கை மோனல், விஜயகாந்துடன் தவசி படத்தில் நடித்த பிரத்யூக்‌ஷா இருவரும்.
சின்னத்திரை நடிகை, நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த ஷோபனாவும் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார்.
சின்னத்திரை நடிகைகள் பலர் திடீர் திடீரென தற்கொலை செய்துக்கொண்டனர். வைஷ்ணவி, பிரதியூஷா, சபர்ணா கடைசியாக சின்னத்திரை சித்ரா தற்கொலை பெரிய அளவில் பேசப்பட்டது.
தற்போது நடிகை தீபா பவுலின் தற்கொலை செய்துக்கொண்டார். பெரிய ஆசைகள், பிரபலம் என வலம் வரும் நடிகைகள் பெரும்பாலான தற்கொலைகள் திருமணமான ஆணை காதலித்து கைகூடாததாலேயே நடந்துள்ளது.