Tap to Read ➤

முதல் படம் ரிலீஸ்... செம குஷியில் அதிதி ஷங்கர்

ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் & கார்த்தி நடிப்பில் விருமன் படத்திற்கு கிடைத்துள்ள பாசிடிவ் விமர்சனங்களால் செம குஷியில் உள்ளார், அதிதி. முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
அதிதி ஷங்கர், இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் ஆவார்.
அதிதி ஷங்கர் நடிப்பின் மீது சிறுவயதில் இருந்தே அதிக ஆர்வம் கொண்டுள்ளார், இதன் காரணமாக இவர் திரையுலகிற்குள் நுழைந்தார்.
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடித்து வெளியான 'விருமன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகி, தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
விருமன் படம் வெளியாவதற்கு முன்பே இவர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விருமன் படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களால் செம குஷியில் உள்ளார்,
அதிதி ஷங்கர்.
இவரது நடிப்பு முதல் படத்திலையே சிறப்பாக பேசப்படுகிறது.
விருமன் திரைப்படத்தில் இவர் 'மதுரை வீரன்' என்ற திரைப்பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார்.
இவர் பாடிய மதுரை வீரன் பாடல் பட்டி தொட்டி என பல இடங்களில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அதிதி ஷங்கர் அழகிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்