Tap to Read ➤

100 கோடி வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் 'டான்'

மே 13, 2022ல் வெளியான சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் உலகளவில் 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள்
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என பலர் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம்.
டான்
இப்படத்தினை சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்து, பின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தினை உலகம் முழுவதும் ரெட் கெய்ன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 19வது (எஸ்.கே.19) படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் - அனிருத் 8வது முறையாக இப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளனர்.
தான் பட்ட கஷ்டங்கள் தனது பிள்ளைக்கு வரக்கூடாது என கண்டிஷனாக இருக்கும் தந்தை, மாணவர்களின் ஒழுக்கம் தான் அவர்களை சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என கண்டிஷனாக இருக்கும் கல்லூரி நிர்வாகம். இவ்விரண்டிற்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் சிவகார்த்திகேயன், எப்படி இதனை சமாளித்த வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்பதே படத்தின் கதை.
கதை
தமிழ் நாட்டில் மட்டும் டான் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 9 கோடிகளும், பின் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் 10 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் இதுவரை
 ₹ 65.76 கோடிகள் வசூல் செய்துள்ளது.
இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் இதுவரை ₹100 கோடிகள் வசூல் சாதனை படைத்துள்ளது.
₹100 கோடி பிளாக் பஸ்டர் பட வரிசையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர் படத்தினை தொடர்ந்து டான் திரைப்படம் 3வது படமாக இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
டான் படத்தின் தகவல்கள்
தகவல்கள்