Tap to Read ➤

மணிரத்னம் அறிமுகப்படுத்திய ஐஸ்வர்யா ராயும் தமிழ் திரையுலகமும்

பொன்னியின் செல்வனில் முக்கிய ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய், 25 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் மணிரதனத்தால் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
Filmibeat Tamil
மணிரத்னத்தின் நாயகியாக ஐஸ்வர்யா பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வரயா ராயை திரையுலகில் அறிமுகப்படுத்தியது மணிரத்னம் அந்த வகையில் அவர் ஐஸ்வர்யா ராயின் குரு என்றால் மிகையல்ல
பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது அவரது திரையுலக வாழ்க்கையில் பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவின் பண்ட் குடும்பத்தைச் சேர்ந்த மும்பைவாசியான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் உலக அளவில் பிரபலமானார்.
ஐஸ்வர்யா ராயை முதன் முதலில் திரைத்துறையில் இழுத்துவந்தவர் மணிரத்னம் தான். தமிழக அரசியலை மையப்படுத்தி அவர் எடுத்த இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார். (இது ஜெயலலிதாவின் வேடம் என்று சொல்லப்பட்டது)
1997 ஆம் ஆண்டு இருவர் படத்தில் அறிமுகமானபின் ஐஸ்வர்யா ராய் இந்தி, பெங்காலி, ஹாலிவுட் படங்கள் என ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இருவர் படத்துக்கு பின் 1999 ஆம் ஆண்டு ஜீன்ஸ் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர் ஷங்கர். அதன் பின்னர் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தார்.
ஐஸ்வர்யா ராயை வைத்து மணிரத்னம் 4 படங்களை இயக்கியுள்ளார். இருவர், ராவணன், குரு, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஆகும். ஷங்கர் ஜீன்ஸ், எந்திரன் படத்தை இயக்கியுள்ளார். தமிழில் ஐஸ்வர்யா நேரடியாக நடித்த படங்கள் 6 ஆகும்.
ஐஸ்வர்யா ராயை வைத்து மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் உடன் நடித்த அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு மணந்தார். இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.
5 ஆங்கில படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளார். ப்ரைக்ட் & பிரஜிடியூஸ், தி மிஸ்ட்ரஸ் ஆஃப் தி ஸ்பைசஸ், ப்ரொவோக்ட், தி லாஸ்ட் லீஜியன், தி பிளாக் பேந்தர் ஆகிய படங்கள் ஆகும்
ஐஸ்வர்யா ராய் 2010 ஆம் ஆண்டு தமிழில் ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டுக்கு பின் நடிப்பதை நிறுத்தினார். தற்போது பொன்னியின் செல்வனில் ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார்.