Tap to Read ➤

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித். அவரது பிறந்த நா

மே 1 அஜித்தின் பிறந்த நாள் மே தினத்தில் பிறந்ததாலோ என்னவோ அனைவருக்குமான மனிதராக எளிமையானவராக அஜித் விளங்குகிறார். அவர் இன்று 52 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்
தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் வரிசையில் அடுத்த வரிசையில் முன்னணியில் இருப்பவர்கள் விஜய் அஜித்
வாழ்க்கையில் எனது ஒவ்வொரு முன்னேற்றத்தையும் நானே செதுக்கினேன் என்று அஜித்துக்கு பொருத்தமான வசனம் ஒன்று இருக்கும். அது அவருக்கு 100% பொருந்தும்
சாதாரணமாக துறைமுகத்தில் கணக்காளராக பணியிலிருந்த அஜித்தின் ஆசை பைக் ரேசராக வேண்டும் என்பதே. ஆனால் அவர் பெரிய நடிகரானது அவரே எதிர்பாராமல் நடிகரானதுதான் விந்தை
அஜித் குடும்பச் சூழல் காரணமாக பட்டப்படிப்பை படிக்க முடியவில்லை. பள்ளிப்படிப்போடு அவரது படிப்பு நின்று போனது. ஆனாலும் பள்ளி படிப்பைத்தாண்டிய அவரது முயற்சிகள் நிற்கவில்லை
ட்ரோன்களை இயக்குவதில் அண்ணா பல்கலைக்கழக டீமுக்கு மெண்டாராக அஜித் செயல்படுகிறார். அவரது டீமை அகில இந்திய அளவில் பயன்படுத்த அழைப்பு வந்துள்ளது
அஜித் எப்போதும் புகழ் விரும்பியோ, பந்தாவாக நடக்கும் நபரோ அல்ல. ஒரு உச்ச நடிகராக இருந்தும் அந்த கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்பவர்
அஜித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர் உச்ச நடிகராக இருந்தாலும் இன்றும் இயக்குநர்களிடம் ஆதிக்கம் செலுத்தாமல் அவர்கள் சொல்வதை மட்டும் செய்வது வழக்கம்
அய்யா கட்டாயப்படுத்து மிரட்டி வரச்சொல்றாங்க அய்யா இது அப்போதைய முதல்வர் கருணாநிதிமுன் நடிகர் அஜித் பேசியது. இது அவரது துணிச்சலான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு
அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதை தவிர்ப்பவர், தேவையற்ற முறையில் எந்த பிரச்சினையிலும் கருத்துச் சொல்லாதவர்
குடிமகனாக தனது கடமையை செய்பவர், தனக்கு ரசிகர் மன்றம் கூடாது என கலைத்தவர், தன்னை தல என்று அழைக்கவேண்டாம் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார்
துப்பாக்கி சுடுவதிலும், பைக் ரைடு போவதிலும், ட்ரோன்கள் இயக்குவதிலும் நடிப்புத்தொழில் தாண்டி ஆர்வம் மிக்கவர்
அஜித் எந்த அளவுக்கு எளிமை என்றால் உணவுக்காக ஆர்டர் கொடுக்கும்போது ஊழியரிடம் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்த அவர் கொண்டாடியது இப்போதும் வலைதளத்தில் உள்ளது
அதேபோல் ரைஃபிள் கிளப்புக்கு கால் டாக்ஸியில் கிளம்பி வர தவறாக எழும்பூருக்கு பதில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் இறங்க அவரைப்பார்த்த போலீஸாருக்கு ஆனந்த அதிர்ச்சி
ரைஃபிள் போட்டியில் கலந்துக்கொண்டு தேசிய அளவிலும் வெற்றிப்பெற்றார்
அஜித்துக்கு இணையான நடிகர் விஜய். இருவரும் தனித்தனியே நடித்து வருகின்றனர். இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே
அஜித் விஜய் நட்பு அலாதியானது. ஒரு பிறந்த நாளில் அஜித்துக்காக விஜய் வாட்ச் ஒன்றை பரிசளித்தார்.nmm. அதை அஜித் இன்றும் அணிந்து வருகிறாராம்
எளிமையான குடும்பம், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மனவி ஷாலினி மகள், மகனுடன் வாந்து வரும் அஜித் 51 வயதை நிறைவு செய்துள்ளார்