Tap to Read ➤

அனிருத்துக்கு மறுவாழ்வு கொடுத்த அஜித்தின் வேதாளம் திரைப்படம்..7 ஆண்டு

பீப் பாடல் சர்ச்சையில் சிக்கி அனைவராலும் ஒதுக்கப்பட்ட அனிருத்துக்கு வேதாளம் படம் மூலம் மறுவாழ்வு கிடைத்தது. அஜித்தின் படத்தை இயக்கிய சிறுத்தை சிறுத்தை சிவாவின் இரண்டாவது படம் வேதாளம்.
Filmibeat Tamil
அஜித் படத்தின் ஆஸ்தான இயக்குநர் வி வரிசை படங்களின் இயக்குநராக புகழ் பெற்றவர் சிறுத்தை சிவா. அஜித்தின் வி வரிசையில் இரண்டாவது படம் வேதாளம்.
சிறுத்தை சிவா படங்களில் வரும் காட்சிகள் நம்ப முடியாததாக இருந்ததால் அதிகம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. அதிகம் கிண்டலடிக்கப்பட்ட இயக்குநரும் சிறுத்தை சிவாவாகத்தான் இருப்பார்.
சிறுத்தை சிவா அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் அவரது படங்கள் நன்றாக ஓடி வெற்றிபெற்றுவிட்டன. அஜித்தை வைத்து அவர் எடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
அஜித்துடன் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வீரம் படத்தில் இணைந்தார் சிறுத்தை சிவா. வீரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வேதாளம் படத்தில் இணைந்தார்.
வேதாளம் படம் அஜித்துக்கு வெற்றிப்படமாகும். இந்தப்படம் 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்-அர்ஜுன் நடித்து வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூலை முறியடித்தது.
இந்தப்படத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் அனிருத் மீண்டும் இசையமைக்க வந்து ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப்படத்தில் ’ஆளுமா டோலுமா’ என்கிற பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
பீப் சாங் போட்டு சர்ச்சையில் சிக்கிய அனிருத்துக்கு அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. இந்த நேரத்தில் அவருக்கு அஜித் படமான வேதாளம் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
ஆளுமா டோலுமா பாடல் பட்டிதொட்டியெங்கும், டிவி ஷோக்கள், திருமண சுப நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பியது. அதன் பின்னர் ஆரம்பித்த அனிருத்தின் செகண்ட் இன்னிங்க்ஸ் பேட்ட, தர்பார், பீஸ்ட், விக்ரம் என தொடர் வெற்றியை கொடுத்தது.
பீப் சாங்கில் பிரிந்த தனுஷ்-அனிருத் ஜோடி திருச்சிற்றம்பலத்தில் இணைந்தது. இந்தப்படத்தின் தாய்க்கிழவி, பெண்ணே பெண்ணே பாடலும் சூப்பர் ஹிட்.
வீரம், வேதாளம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் ஆஸ்த்தான பட இயக்குநர் ஆனார் சிறுத்தை சிவா. அடித்து அஜித்தின் விவேகம் படத்தையும் இயக்கினார். இந்தப்படத்தில் அமைந்த நம்பமுடியாத காட்சிகள் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும் படம் சிறப்பாக ஓடியது.
தொடர்ந்து அடுத்த படமான விசுவாசம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதனுடன் ரஜினியின் பேட்ட படமும் மோதியது. இதில் விஸ்வாசம் முந்தியது. பேட்ட, விசுவாசம் இரண்டு மதயானைகளின் மோதல் போல் பிரம்மாண்டமாக இருந்தது.
அஜித்தின் வேதாளம் படத்துக்கு பின் அடுத்து விஸ்வாசம் பெற்ற வெற்றியை அடுத்து அண்ணாத்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது சிறுத்தை சிவாவுக்கு.